இ.குமாரசாமி சர்மா. யாழ்ப்பாணம்: பிரம்மஸ்ரீ கு.நந்தகோபன், 15, பி.ஏ.தம்பி லேன், வண்ணார் பண்ணை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xviii, 96 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. கர்நாடக சங்கீத முன்னோடிகள், இசை மேதைகள், வித்துவான்கள், வாழ்ந்துவரும் கலைஞர்கள் பற்றிய விபரங்களைத் தாங்கியதாக இந்நூல் 15 பிரிவுகளில் தகவல்களை உள்ளடக்குகின்றது. கர்நாடக சங்கீத இசை முன்னோடிகள், தமிழ்நாட்டில் சங்கீதம், தென் இந்திய இசை மேதைப் பாடகர்கள், தமிழக வயலின் கலைஞர்கள், தமிழக மிருதங்க வாத்திய கலைஞர்கள், இந்திய சங்கீத மேதைகளின் மகத்துவம், நமது நாட்டு இசைப் பாடகர்கள், இசை மன்றங்கள், நமது நாட்டு வயலின் மிருதங்க வாத்தியக் கலைஞர்கள், பரத நாட்டியக் கலைஞர்கள், தமிழ்நாட்டில் நாதஸ்வர, தவில் கலைஞர்கள், எம் மண்ணின் நாதஸ்வர தவில் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சிலரின் சிறப்புக்கள், சங்கீதக் கலை எதிர்காலம், பிரபலம் பெற்ற சில சங்கீதப் பாடல்கள் ஆகிய பிரிவுத் தலைப்புகளில் தகவல்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. 927.92 நாடகக் கலைஞர்கள்