14946 பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் நாடகமும்/பேராசிரியர் சு.வித்தியானந்தனும்நாட்டார் வழக்காற்றியலும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-80-0. தமிழ் கூறும் நல்லுலகில் போற்றப்படும் பேராசிரியர்களுள் க.கணபதிப்பிள்ளை முக்கியமானவர். பருத்தித்துறை புலோலி கிழக்கில் உள்ள தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 02.07.1903 இல் பிறந்த இவரது தந்தையார் ஒரு பாரம்பரிய தமிழ் வைத்தியர். தனது தந்தையாரின் மேற்பார்வையில் தமிழ் மொழியைக் கற்ற கணபதிப்பிள்ளை பின்னர் பண்டிதர் பிரம்மஸ்ரீ முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடமும் தமிழுடன் சம்ஸ்கிருதத்தையும் கற்றார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்து, 1930 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தேர்வில் முதல் வகுப்பில் சித்தியெய்தினார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தினையும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். 1936 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். நாடகப் பணி, கவிதை, சிறுகதை ஆக்கமுயற்சிகள், இலக்கிய, வரலாற்று, கல்வெட்டு ஆய்வுகள் எனப் பல துறைகள் சார்ந்து பணியாற்றினார். பேராசிரியரவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடங்கி அதனைத் தொடர்ந்து நடத்த வழி செய்ததுடன் தமிழ்ச் சங்கத்திற்கென பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தினார். ‘உடையார் மிடுக்கு”, 927.92 நாடகக் கலைஞர்கள் 544 நூல் தேட்டம் – தொகுதி 15 ‘கண்ணன் கூத்து”, ‘நாட்டவன் நகர வாழ்க்கை”, ‘முருகன் திருகுதாளம்”; என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். இந்நாடகங்கள் ‘நானாடகம்”(1940) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. மேலும் ‘பொருளோ பொருள்”, ‘தவறான எண்ணம்” ஆகிய இரு நாடகங்களும் பேராசிரியரால் எழுதப்பட்டதுடன் அந்நாடகப்பிரதிகளும் ‘இரு நாடகம்”(1952) என்ற தலைப்பில் அச்சுருப்பெற்றன. ஈழத்தின் சிறந்த கல்வியாளரான பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணிபுரிந்தவர். பல்கலைக்கழக தமிழ் ஆளுமைகள் தொடரில் இரண்டாவது நூலாக வெளிவந்துள்ள இப்பிரசுரம், ஜீவநதி வெளியீட்டகத்தின் 105ஆவது பிரசுரமுமாகும்.

ஏனைய பதிவுகள்

12330 – பாரம்பரிய தொழிற்பயிற்சி முறையில் உய்த்துணரத்தக்க கல்வி முறைகள்.

நாகமுத்து தணிகாசலம்பிள்ளை. கொழும்பு: ச.நா. தணிகாசலம்பிள்ளை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 6: குயளவ Pசiவெநசளஇ 289, ½, காலி வீதி). 60 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 17.5ஒ12.5 சமீ., ISBN:

14829 மிகப் பெரும் ஆயுதக் களைவு.

யுஆன் ஹெளசுன் (ஆங்கில மூலம்), மு.பொன்னம்பலம் (தமிழாக்கம்). பத்தரமுல்ல: நெப்யூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை, 1வது பதிப்பு, 2018. (பத்தரமுல்ல: நெப்யூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை). (4), 274

12514 – பாடவிதான முகாமைத்துவமும் ; பாடசாலை ஒழுங்கமைப்பும் (அத்தியாயம் ; 1-6).

ஆசிரிய கல்வி நிறுவகம். மகரகம: ஆசிரிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1993. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-டீஇ P.வு. டீ சில்வா மாவத்தை). 138 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12174 – முருகன் பாடல்: எட்டாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

12914 – தர்மதீபம்: அமரர் வி.தர்மலிங்கம் நினைவு இதழ், 1985.

அமரர் வி.தர்மலிங்கம் குடும்பத்தினர். சுன்னாகம்: திருமதி சரஸ்வதி தர்மலிங்கம், காமதேனு, கந்தரோடை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 80 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x

14020 பகிர்தலும் புரிதலும்: ஞானம் பத்திரிகை ஆசிரியத் தலையங்கங்கள்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxvi, 418 பக்கம், விலை: ரூபா 750.,