ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-80-0. தமிழ் கூறும் நல்லுலகில் போற்றப்படும் பேராசிரியர்களுள் க.கணபதிப்பிள்ளை முக்கியமானவர். பருத்தித்துறை புலோலி கிழக்கில் உள்ள தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 02.07.1903 இல் பிறந்த இவரது தந்தையார் ஒரு பாரம்பரிய தமிழ் வைத்தியர். தனது தந்தையாரின் மேற்பார்வையில் தமிழ் மொழியைக் கற்ற கணபதிப்பிள்ளை பின்னர் பண்டிதர் பிரம்மஸ்ரீ முத்துக்குமாரசுவாமிக் குருக்களிடமும் தமிழுடன் சம்ஸ்கிருதத்தையும் கற்றார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் படித்து, 1930 ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலைத் தேர்வில் முதல் வகுப்பில் சித்தியெய்தினார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தினையும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றுக்கொண்டார். 1936 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். நாடகப் பணி, கவிதை, சிறுகதை ஆக்கமுயற்சிகள், இலக்கிய, வரலாற்று, கல்வெட்டு ஆய்வுகள் எனப் பல துறைகள் சார்ந்து பணியாற்றினார். பேராசிரியரவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடங்கி அதனைத் தொடர்ந்து நடத்த வழி செய்ததுடன் தமிழ்ச் சங்கத்திற்கென பல நாடகங்களை எழுதி நெறிப்படுத்தினார். ‘உடையார் மிடுக்கு”, 927.92 நாடகக் கலைஞர்கள் 544 நூல் தேட்டம் – தொகுதி 15 ‘கண்ணன் கூத்து”, ‘நாட்டவன் நகர வாழ்க்கை”, ‘முருகன் திருகுதாளம்”; என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். இந்நாடகங்கள் ‘நானாடகம்”(1940) என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தன. மேலும் ‘பொருளோ பொருள்”, ‘தவறான எண்ணம்” ஆகிய இரு நாடகங்களும் பேராசிரியரால் எழுதப்பட்டதுடன் அந்நாடகப்பிரதிகளும் ‘இரு நாடகம்”(1952) என்ற தலைப்பில் அச்சுருப்பெற்றன. ஈழத்தின் சிறந்த கல்வியாளரான பேராசிரியர் சு.வித்தியானந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பணிபுரிந்தவர். பல்கலைக்கழக தமிழ் ஆளுமைகள் தொடரில் இரண்டாவது நூலாக வெளிவந்துள்ள இப்பிரசுரம், ஜீவநதி வெளியீட்டகத்தின் 105ஆவது பிரசுரமுமாகும்.
How to Wager on Ufc On line
Articles Is actually Wagering Judge Inside Ny? | each way bet calculator golf Need to Gamble Today? Browse the #step 1 Real money Gambling enterprise