எம்.ஜெயகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: கிருஷ்ண கலாலயம், ஜீ 1/6, சாஞ்சி ஆராச்சித் தோட்டம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (கொழும்பு: பிருந்தா எண்டர்பிரைசஸ்). ஒஒiஎ, 122 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-7379-00-5. நாற்பதாண்டுக் காலமாக கலைத்துறையில் அர்ப்பணிப்புடன் செயலாற்றிவரும் கே.மோகன்குமார் பற்றிய ஒரு ஆவணப்பதிவாக ‘மகுடம்” வெளிவந்துள்ளது. அமரர் லடீஸ் வீரமணி, சபா.ஜெயராசா, கலைச்செல்வன், சந்திரரத்ன மாபிடிகம, அந்தனி ஜீவா, கே.எஸ்.சிவகுமாரன், தே.செந்தில்வேலவர், வீ.தனபாலசிங்கம், கே.செல்வராஜன், வீ.கே.டி.பாலன், எஸ்.ஐ.நாகூர்கனி, முல்லை செல்வராஜ், பி.எச்.அப்துல் ஹமீட், பிரபா கணேசன், எஸ்.தில்லைநாதன், ஹெலன்குமாரி ராஜசேகரன், வி.தேவராஜ், தம்பிஐயா தேவதாஸ், எம்.ஏ.றபீக், எம்.கே.ராகுலன், கே.அரசரட்ணம், மொழிவாணன், ராதா மேத்தா, எஸ்.விஸ்வநாதன், சசாங்கன் சர்மா, ஆர்.பீ.அபர்ணாசுதன், ஷியா உல் ஹஸன், கே.வீ.எஸ்.மோகன், என்.நஜ்முல் ஹ{சைன், ஏ.எஸ்.எம்.நவாஸ், ஜோபு நஸீர், கே.சந்திரசேகரன், எம்.அன்பழகன், ஜீ.ஜே.ராஜ், தியாககுமார், ஜெறாட் நோயல் ஆகிய 36 சமூக ஆளுமைகள் மோகன்குமாரின் கலைப்பணி தொடர்பாகத் தமது மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். நாற்பதாண்டுகளாகப் பல சிரமங்களை எதிர்கொண்டு, கிருஷ்ண கலாலயத்தை நடத்திச் செல்லும் மோகன்குமார் நாடகத்துறையில் இளம் தலைமுறையினரை அத்துறையில் ஈடுபடுத்தி அவர்களுக்குப் பயிற்சிகளையும் வழங்கிவருவதோடு, 200க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். நெறியாளராகப் பல தேசிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். மேலும் பார்க்க: கூத்துக் கலைஞர் விஜேந்திரனுடனான நேர்காணல்.14509 927.92 நாடகக் கலைஞர்கள்