சேர். ஜே.ஏ.ஆர். மரியற்று (ஆங்கில மூலம்), க.கிருட்டினபிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). x, 496 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. சேர் .A.R.Marriot எழுதி லண்டனில் Methuen and Co. வெளியிட்டிருந்த The Evolution of Modern Europe (1453-1939) என்ற வரலாற்றுப் பாடநூலின் தமிழாக்கம். இற்றையூழியின் உதயம், பௌதிகவியலும் அரசியலும், பிரான்சின் ஆக்கம், ஜப்பானிய முடியாட்சி, இத்தாலியப் போர்கள், ஜேர்மனியும் பேரரசும், புரொட்டஸ்தாந்து மதச் சீர்திருத்தம், கத்தோலிக்க மதச் சீர்திருத்தம், ஐக்கிய நெதர்லாந்தின் தோற்றம், பிரான்சிற் கத்தோலிக்கரும் புரொட்டஸ்தாந்தரும், முப்பதாண்டுப் போர் ஆகியவை முதலாம் பாகத்தில் விளக்கப்பட்டுள்ளன. இரிசலூ, மசரின் என்பார் காலத்துப் பிரான்சு, 14ஆம் உலுயியின் ஆட்சி, பிரான்சும் ஐரோப்பாவும், போற்றிக்கு நாடுகள், இரசியாவின் எழுச்சி, கிழக்குப் பிரச்சினை-ஒற்றோமன் துருக்கர், 18ஆம் நூற்றாண்டு, உதிரத்து இணக்கமும் அதன் பின்னரும், பிரசியாவின் எழுச்சி, ஏழாண்டுப் போர், போலந்தின் பிரிவினைகள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் தோற்றம், பழைய ஆட்சியின் முடிவுதண் ணளித் தனியாட்சி ஆகிய பாடங்கள் 2ஆவது பாகத்தில் தரப்பட்டுள்ளன. மூன்றாம் பாகத்தில் பிரான்சிய புரட்சி, நெப்போலியன் பொனபாட்டின் எழுச்சி, நெப்போலியனின் வீழ்ச்சி-வியன்னாப் பேரவை, மீட்பு-எதிர்விளைவு-புரட்சி, பெல்ஜியத்தின் தோற்றம், கிழக்குப் பிரச்சினை, இத்தாலி ஐக்கியம் பூண்டமை, ஜேர்மன் ஐக்கியம் பூண்டமை, இரண்டாம் பேரரசும் மூன்றாம் குடியரசும், ஐரோப்பாவின் அகற்சி, சூழலியற் புரட்சி, மாபெரும் உலகப் போரின் எல்லையில், உலகப் போர், அமைதிப் பொருத்தனைகள், அமைதியின்மையும் அபிவிருத்தியும், படுகுழிக்குள் இறங்கல் ஆகிய கட்டுரைகள் உள்ளன. மொத்தம் 39 அத்தியாயங்களில் இவை விளக்கப்பட்டுள்ளன. வம்சவழிப் பட்டியல், நாட்டுப்படங்கள் என்பன பின்னிணைப்பில் காணப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43415). 940 ஐரோப்பிய வரலாறு
dos Minimum Deposit Internet casino 2024
Articles Exactly how we Rates dos Deposit Casinos inside Canada?: Betway casino bonuses Put Casino Faq’s Useful Info to possess Canadian Bettors Two-buck deposit casinos