14965 பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு: நான்காம் பகுதி 1688-1939.

சோச்சு தவுண்சென் உவாணர், சி.என்றி கே. மாட்டின், டி.எசுகின் மூர் (ஆங்கில மூலம்). இந்திரா மகாதேவா, கா.பத்மநாதன் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1960. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). ஒஇ 541 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. George Townsend Warner, C.Henry K.Marten, D.Erskine Muir ஆகிய மூவராலும் எழுதப்பெற்று லண்டன் Blackie and Son நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற The new Groundwork of British History Section Four (1688-1939) என்ற நூலின் தமிழாக்கம் இது. இலங்கைப் பாடசாலைகளில் உயர்வகுப்புகளுக்குப் பயன்படுத்தவென இலங்கை அரசகரும மொழித்திணைக்களத்தால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் பிரான்சுடன் போராட்டமும் யாப்புமுறை முடியரசின் வளர்ச்சியும் (1688-1714), பிரித்தனின் விரிவும் முடியுடன் நடந்த இறுதிப் போட்டியும் (1714-1783), பிரான்சுடன் பெரும் இகல்: புரட்சியும் நெப்போலியனும் (1783-1815), கைத்தொழில் விருத்தி: கெடுதிகளும் சீர்திருத்தங்களும் (1815-1867), அரசியல் வளர்ச்சி: பேரரசாட்சியும் குடியாட்சியும் (1867-1914), போரும் பின்னடப்பும் (1914-1939) ஆகிய 6 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22103). 953 அராபிய வரலாறு

ஏனைய பதிவுகள்