மகிந்த சோமதிலக (சிங்கள மூலம்), ஜே.எம்.றிழ்வான் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2014. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (13), 14-152 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 450., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-30-5386-2. அறிமுகம், முதலாம் பராக்கிரமபாகு, அகத்திய முனிவர், கபில முனிவர், புலஸ்தி ரிஷி அல்லது இந்து முனிவர், இலங்கையில் சோழர்களது ஆதிக்கம், ராஜராஜேஸ்வர தேவாலயமும் கருவூர் தேவரும் ஆகிய அத்தியாயங்களில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. மகிந்த சோமதிலக பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவராவார். மொழிபெயர்ப்பாளர் ஜே.எம். றிழ்வான் அதே பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை உதவி விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65508).