14970 நந்திக் கடல் பேசுகிறது: பின் போர்க்காலமும் களப் பதிவுகளும்.

ஜெரா (தொகுப்பாசிரியர்). இலங்கை: ஊறுகாய் மற்றும் வொய்ஸ் எண்ணிம தளம், 2வது பதிப்பு 2020, 1வது பதிப்பு, 1919. (அச்சகவிபரம் தரப்படவில்லை). (10), 277 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5231- 00-3. முள்ளிவாய்க்கால் இறுதிக்கண அனுபவங்களில் ஆரம்பித்து கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர் சந்தித்துவரும் சவால்கள் தொடர்பான நாற்பது கட்டுரைகளை இந்நூ லில் வன்னியைச் சேர்ந்த விவரணவியலாளர் ஜெரா தொகுத்துள்ளார். போர் நடைபெற்றபோது தாயகத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள், துறைசார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் ஆகியோரிடம் இருந்தும் அனுபவங்களின் அடிப்படைகளில் ஆக்கங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த கட்டுரைகள் ஈழத் தமிழ்ப் போராட்டத்தையும் அதன் நியாயத்தையும் பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தி நிற்கின்றது. இந்த நூ லில் நாற்பது தலைப்புகளில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் விபரங்கள் வருமாறு: நந்திக்கடல்- சுதந்திர வேட்கை (யூட் லால்), விடுதலையின் இறுதி நாட்கள் அவை (முகில்நிலா), உயிர்வாழ்வதற்காக உயிரைப் பணயம் வைத்தல் (இளைய வன்னியன்), கையேந்தும் கலாசாரத்தை தந்துவிட்டுப்போன 2009 (செ.ராஜசேகர்), போருக்குப் பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் (தெய்வீகபாலன் சந்திரகுமார்), இனவழிப்புப் பின்னணியில் தமிழ் பெண்கள் (பரணி கிருஷ்ணரஜனி), தமிழர் தாயகக் கோட்பாட்டை கேள்விக்குட்படுத்துவதே மகாவலி திட்டத்தின் இலக்கு (வி.நவநீதன்), தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்ச்சியை சிதைக்கும் வெலிஓயா (பேராசிரியர் அ.சூசை), ஒரு தேசமாகத் திரள்வது எங்கிருந்து தொடங்குவது (நிலாந்தன்), தமிழர் நீக்கம் செய்யப்படும் தமிழர் தலைநகர் (ஜெனோஜன்), கன்னியா- சுடும் நிலம் (திருமலை நவம்), சூழல் அரசியலும் நில அபகரிப்பும்- யுத்தத்தின் பச்சை முகம் (பொ.ஐங்கரநேசன்), சிறைக்குள்ளயே சாகடிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் (சக்திவேல் அடிகளார்), அம்மா இருக்கும் வீட்டைவிட அப்பா இருக்கும் சிறை மேல் (மு.தமிழ்ச்செல்வன்), வலிகளை வலிமையாக்குதல் (ஞானதாஸ் காசிநாதர்), வன்னிக்குள் மலையை மையப்படுத்திய செய்திகள் (கே. குமணன்), தமிழர் கடல் (ஜெயா), போருக்குப் பின்னான பத்தாண்டுகளில் தமிழ் ஊடகத்துறை (சி.ரகுராம்), பத்தாண்டுகளில் ஈழப்பிரச்சினையை தமிழகம் கையாண்ட விதம் (சரவணன்), வேர்கள் அறியா விருட்சம் (ட்ரைடன் கே. பாலசிங்கம்), பத்தாண்டுகளில் முள்ளிவாய்க்கால் மரபு (பாசன அபேவர்தன), ருவாண்டா மற்றும் இலங்கை- இரு இனப் படுகொலைகளின் கதைகள் (உருத்திரமூர்த்தி சேரன்,ஷெர்ரி ஐகன்), பின் முள்ளிவாய்க்கால் வரலாற்றுத் தளத்தில் நினைவுத்திறன் (எழில்ராஜன் அடிகளார்), பத்துவருட நிலுவை- இங்கிருந்து எங்கு (சஞ்சுலா பியற்றர்ஸ்), நந்திக்கடல் கோட்பாடுகள் (பரணி கிருஸ்ணரஜனி). இவர்களுடன் தொகுப்பாசிரியர் ஜெரா எழுதிய இரும்புத் துண்டுகளுடன் வாழும் மனிதர்ஃநலன்புரி எனும் நரகம்/ மரணச்சான்றிதழ் வேண்டாம்/படத்தில் இருப்பது அப்பாதான்/ போராடி/தண்டிக்கப்படும் நிராயுத பாணிகள்/ இந்த வாழ்க்கை நரகமா இருக்கு/ இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்/ வவுனியா வடக்கில் மீளக்குடியேறலாமா/ தென்கரையாக விழுங்கப்படும் வவுனியா வடக்கு/கேப்பாப்புலவு நிலமே எங்கள் உரிமை/ தண்ணீர்தான் பிரச்சினை தண்ணீருக்கு நடுவில் இருக்கும் தீவு/ புல்மோட்டையில் திடீர் குடியேற்றங்கள்/ வாழ்வோடு ஒட்டிக்கொண்ட போரின் வடு/சூறையாடப்படும் நெய்தல்/ இலங்கையின் நீதி/ முள்ளிவாய்க்கால் 2019 ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்