14973 மாவை சேனாதிராசாவின் மறைக்கப்பட்ட மறுபக்கம்.

வீ.ஆனந்தசங்கரி. யாழ்ப்பாணம்: வீ.ஆனந்தசங்கரி, தலைவர், தமிழர் விடுதலைக் கூட்டணி, செல்வா அகம், 58/4, ஸ்டான்லி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13 சமீ. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரிக்கு எதிராக மேடைகளிலும், ஊடகங்களிலும் கருத்துக்களைத் தெரிவிப்பதற்குப் பதிலடியாக 06.11.2003 அன்று தலைவர் வீ. அனந்தசங்கரி அவர்களால் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நீண்ட கடிதத்தின் மறுபிரசுரம் இதுவாகும். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும், மாவை சேனாதிராஜா அவர்கள் வெளியிட்ட அபாண்டமான கருத்துக்களால் தான் அடைந்த வேதனையையும் அதற்கான மறுதலிப்புகளையும் இக்கடிதத்தில் விரிவாக எழுதியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

16959 கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும் : ஒரு வரலாற்றுப் பதிகை.

இளையதம்பி பாலசுந்தரம். கனடா: சுவாமி விபுலாநந்தர் தமிழியல் ஆய்வு மையம், ரொறன்ரோ, 1வது பதிப்பு, 2017. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough, Toronto). 517 பக்கம், விலை: கனேடிய