14974 சோனகத் தேசம்: மிகச் சுருக்கமான அறிமுகம்.

A.B.M .இத்ரீஸ். வாழைச்சேனை 05: சோனகம் வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 208 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×15 சமீ.,ISBN: 978-955-0697-01-4. இலங்கையில் முஸ்லிம் மக்களின் வரலாற்றை கண்டறியும் நோக்கில் எழுதப்பட்ட நூல். சோனகத் தேசம் -அறிமுகக் குறிப்பு, உலகின் முதல் நாகரிகம், சோனகர் இன வரலாறு ஆகிய அறிமுகப் பக்கங்களைத் தொடர்ந்து இந்நூலின் முதலாம் இயலில் வரலாறு பற்றி அல்குர் ஆன், வரலாற்றிற்கு இஸ்லாமிய வியாக்கியானம், எல்லாக் காலத்திற்குமான தூது, உள்ளுணர்வு, நம்பிக்கை, விண்வெளிப் பயணம்- நம்பிக்கை ஓர் அறிவு ஆகிய விடயங்களும் இரண்டாம் இயலில் உலகின் தோற்றம், ஆதம் (அலை), அவ்வை, ஹாபில் காபில், ஷீது (அலை) ஆகிய விடயங்களும் மூன்றாம் இயலில் நூஹ் (அலை)யும் நதிக்கரை நாகரிகமும், லெமூரியா (குமரிக்) கண்டமும் நோவாவின் பிரளயமும், கிழ்ர் (அலை), முன்னைய நபிமார்களும் தொல்லியல் சான்றுகளும் ஆகிய விடயங்களும் நான்காம் இயலில் சோனக குடிப் பரம்பலும் ஆட்சியும், இலங்கையை ஆண்ட சோனக மன்னர்கள், இலங்கைச் சோனகரின் பூர்வீகத் தொழில்கள் ஆகிய விடயங்களும் ஐந்தாம் இயலில் சோனக மொழியும் பண்பாடும், சோனகம்-ஒரு தனித்துவ மொழி, பிற மொழிகளில் சோனக மொழிச் சொற்கள், சோனகப் பண்பாடு, பண்பாட்டு ஒற்றுமை ஆகிய விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Beste diese Seite anklicken Online Casinos

Content Inside Welchem Spielsaal Durchlauf Gewinnt Man Amplitudenmodulation Meisten? Schlussbetrachtung Zum Besten Online Kasino Levelup Spielsaal In wie weit Das Mobile Spielsaal Bonus Bloß Einzahlung

Eye Of Horus Vortragen

Content Wo Existiert Es Bessere Gewinnchancen: Online Und Unangeschlossen? Was Erwirtschaften Mir Kostenfrei Diese Schlusswort Zum Eye Of Horus Slot Das Auge symbolisiert die eine

14969 இலங்கை இந்திய ஒப்பந்தம்: ஒரு நோக்கு.

செ.துரைசிங்கம். புத்தளம்: சிந்தியா கலை இலக்கிய வட்டம், இல. 22/17, முதலாம் ஒழுங்கை, கடுமையான்குளம் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). xiii, 50 பக்கம், விலை: ரூபா 100.,