14977 கங்கைவேலி.

சி.நந்தகுமார். திருக்கோணமலை: சிவசுப்பிரமணியம் நந்தகுமார், நகராட்சிமன்ற உறுப்பினர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1999. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). (2), 29 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 25×18 சமீ. திருக்கோணமலை நகரிலிருந்து 23 மைல் தொலைவில் உள்ள மூதூர்ப் பகுதியில் அமைந்துள்ள கங்குவேலி என்ற கிராமம் மகாவலி கங்கையை எல்லையாகக் கொண்டது. முன்னர் கங்கைவேலி என்று அழைக்கப்பட்டது. கொட்டியாரபுரப் பற்றிலுள்ள கிராமங்களின் வரலாற்றுப் பின்புலங்களையும் அழிவுக்குள்ளான ஆலயங்களினதும் வரலாறுகளை மீட்டுப்பார்க்க விளையும் முன்முயற்சியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முன்னர் திருக்கரைசையம்பதியை (கங்குவேலி) மத்தியாகக் கொண்ட ஒரு சைவ சாம்ராச்சியமே இப்பிரதேசத்தில் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தை இந்நூலாசிரியர் வலியுறுத்துகிறார். அதற்கு ஆதாரமாக இங்கு அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள லிங்கம், கோமுகை, பலிபீடம், முக்கூட்டுக் கல், வாயிற்கற்கள், தூண்கள், முதலியவற்றை குறிப்பிடுகின்றார். இவ்வாதாரங்களின்படி சிற்ப சாஸ்திர முறைப்படி அமைந்த மாபெரும் சிவாலயம் ஒன்று இங்கு முன்னர் இருந்திருப்பதை வலியுறுத்துவதாகக் குறிப்பிடுகிறார். மேலும் திருக்கோணமலை மாவட்டத்தில் தலபுராணம் உள்ள இரண்டு கோயில்களில் திருக்கரைசையம்பதியும் ஒன்று. காலவெள்ளத்தில் அழிந்துபோயுள்ள திருக்கரைசை மாநகரை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும்போது கிழக்கில் சைவப் பண்பாட்டுக் கருவூலங்களுக்கு வலுவூட்டும் புதிய தகவல்கள் எமக்கு வந்துசேரலாம். இந்நூல் அத்தகைய ஒரு ஆய்வுக்கு வழிகாட்டும் நோக்கில் புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்களைப் பதிவுசெய்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21217).

ஏனைய பதிவுகள்

12098 – இலங்கை இந்து: திருக்கேதிச்சரம் மண்டலாபிஷேக மலர் 1976.

நா.முத்தையா (இதழ் ஆசிரியர்), ஐ.தி.சம்பந்தன் (துணைஆசிரியர்). கொழும்பு 4: அகில இலங்கை இந்து மாமன்றம், சரஸ்வதி மண்டபம், 25, லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1976. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்). (4), 76

14770 துர்கா.

மொழிவாணன். கொழும்பு 13: நீரஜா பப்ளிக்கேஷன்ஸ், 248/83, ஆட்டுப்பட்டித் தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1982. (கொழும்பு: மொடர்ன் பிரின்டர்ஸ்). viii, 100 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 9.90, அளவு: 17.51×2 சமீ.

12705 – கட்டியம்: உலகத் தமிழர் அரங்க ஆய்விதழ். தொகுதி 1-எண்6: அக்டோபர்-டிசம்பர்-2003.

அன்ரன் பொன்ராஜா (நிர்வாக ஆசிரியர்), வீ.அரசு (சிறப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: தமிழ் நாடகக் கல்லூரி, சுவிஸ், இணை வெளியீடு, தமிழ்நாடு: விறல் அறக்கட்டளை, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (சென்னை: கணேசமூர்த்தி, ஜோதி என்டர்பிரைசஸ்). 159

14234 முருகன்கீர்த்தனைகள்: ஆறுமுக வேலவன் துதி. பாமதி மயூரநாதன்.

யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). vii, 24 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு:

14148 நல்லைக்குமரன் மலர் 2005.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xii, 160 + (54) பக்கம், புகைப்படங்கள்,

14659 விரல்சூப்பி.

ப.கனகேஸ்வரன் (புனைபெயர்: கே.ஜி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 85 பக்கம், விலை: ரூபா 150.,