14978 கன்னியா: பண்டைய சைவத் தமிழரின் பாரம்பரிய அடையாளம்.

என்.கே.எஸ். திருச்செல்வம். திருக்கோணமலை: இராவண சேனை வெளியீடு, இணை வெளியீட்டாளர், கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xxxii, 404 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955- 3726-08-7. இந்நூல் கன்னியா வெந்நீர் ஊற்றுகள் பற்றிய புராண வரலாறு, பண்டைய நூற்குறிப்புகள், வெந்நீர் ஊற்றுக்கள், இங்கிருந்த கோயில்கள், கன்னியா மலையில் உள்ள சமாதி ஆகியவை தொடர்பான ஐரோப்பிய அறிஞர்களின் ஆய்வுக் குறிப்புகள், இங்கு சிவன் கோயில் இருந்தமைக்கான தொல்பொருள் சின்னங்கள், பிள்ளையார் கோயிலின் சிதைவுகள், கடந்த நூற்றாண்டில் கன்னியா தொடர்பான முக்கிய விடயங்கள், இங்கிருந்த கோயில் அழிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் அண்மைக்காலமாக கன்னியாவில் இடம்பெற்று வரும் பௌத்த ஆக்கிரமிப்புக்கள் போன்ற விடயங்களை கிடைக்கக்கூடிய ஆதாரங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படுத்துகின்றது. கன்னியா ஓர் அறிமுகம், கன்னியா பெயர் வரலாறு, கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் புராண வரலாறு, கன்னியா மலையில் காணப்படும் இராவணனின் தாயின் சமாதி, கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள், மகாபாரதத்தில் கன்னியா தீர்த்தம், கன்னியாவில் அகத்திய முனிவர் அமைத்த ஆதி சிவன் கோயில், கன்னியாவில் இருந்த சிவலிங்கங்கள், கன்னியாவில் ஆதி பிள்ளையார் கோவில், கன்னியா பிள்ளையார் கோவில் பற்றிய வரலாற்று அறிஞர்களின் குறிப்புகள், கன்னியாவில் பௌத்த விகாரை இருந்தமை பற்றி வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனரா?, கன்னியா வெந்நீர்க் கிணறுகள் மற்றும் அவை பற்றிய பொதுவான விபரங்களைக் குறிப்பிடும் வரலாற்று அறிஞர்கள், கன்னியா பற்றிக் குறிப்பிடும் தமிழ் நூல்கள், மடத்தடி மாரியம்மன் கோயிலுக்கும் கன்னியாவுக்கும் உள்ள தொடர்பு, ஆலடி விநாயகர் கோயிலுக்கும் கன்னியாவுக்கும் உள்ள தொடர்பு, சண்முகா தர்ம ஸ்தாபனத்திற்கும் கன்னியாவுக்கும் உள்ள தொடர்பு, உப்புவெளி பிரதேச சபைக்கும் கன்னியாவுக்கும் உள்ள தொடர்பு, கடந்த நூற்றாண்டில் கன்னியா, இனக் கலவரங்களின்போது அழிக்கப்பட்ட கன்னியா கோயில்கள், கன்னியாவில் இந்துக்களின் வழிபாட்டுப் பாரம்பரியம் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்ட வரலாறு, கன்னியா சைவத் தமிழ் மக்களின் பூர்வீகம்- பண்டைய அடையாளம்-கன்னியாவை மீட்டெடுப்போம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் கன்னியா பற்றிய விரிவான ஆய்வினை முன்னெடுத்துள்ளது. பின்னிணைப்பாகக் காணப்படுகின்ற 30 அனுபந்தங்கள், இந்நூலாசிரியரின் ஆழமான ஆய்விற்கான துணை ஆவணங்களாகத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்