அருமைநாதன் ஸதீஸ்குமார். திருக்கோணமலை: வைத்திய கலாநிதி அருமைநாதன் ஸதீஸ்குமார், 48ஃ190 கண்டி வீதி, விநாயகபுரம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: எஸ்.எஸ்.டிஜிட்டல்ஸ் பிரின்ட்ஸ்). ஒஒஎi, 171 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×13 சமீ., ISBN: 978-955- 44703-2-3. பழம்பெரும் வரலாற்றைக்கொண்ட கொட்டியாரபுரப்பற்றின் பெருமைகளையும் அதனுடன் சார்ந்த வரலாறுகளையும் பல ஆதாரங்களுடன் இருபது கட்டுரைகளில் ஆவணப்படுத்தும் முயற்சியாக இந்நூல் வெளிவந்துள்ளது. வரலாற்றுக்கால கேந்திர நிலையம் கொட்டியாரத்துறை, திருக்கரைசையம்பதி அகத்தியதாபன சிவன் ஆலயம், கொட்டியாரப்பற்று பிராமி சாசனங்கள், வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில், சேறுவில மங்கள ரஜமகா விகாரை, சம்பூர் பத்திரகாளி அம்மன் ஆலயம், தேசிய வீரன் இளஞ்சிங்க வன்னிமை, நீலாப்பளை பத்தினியம்மன் ஆலயம் (தாயம்மன்), மூதூர் புனித அந்தோனியார் ஆலயம், சம்பூர் சுடுமண் உருவங்கள், மூதூர் சுடுமண் உருவங்கள், மூதூர் பெரிய பள்ளிவாசல், கும்பவிழா, கொட்டியாரப்பற்று கல்வெட்டு சாசனங்கள், சேனையூர் நாகம்மாள் ஆலயம், கொட்டியாரத்துக் காவியங்கள், திருமங்கலாய் சிவன் ஆலயம், கௌரவ இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம், கொம்பு முறிக்கொம்பு விளையாட்டுச் சடங்கு, பண்டைக்கால துறைமுகப் பட்டினம் இலங்கைத்துறை, வெருகல் கோயில் களவு காவியம் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
12398 – சிந்தனை: தொகுதி I இதழ் 3 (கார்த்திகை 1983).
சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, கார்த்திகை 1983. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை). (7), 141 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 24.5×17