14980 திருக்கோணேஸ்வரம் கையேடு: திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை அவர்களின் நினைவேடு.

நினைவு மலர்க் குழு. திருக்கோணமலை: நாகராஜா கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1971. (அச்சக விபரம் தரப்படவில்லை). (30) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15 சமீ. திருக்கோணமலையைச் சேர்ந்த திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை (சின்னக்கிளி 04.11.1937-31.03.1971) அவர்களின் மறைவின் முப்பத்தியொராம் நாள் நினைவையொட்டி வெளியிடப்பட்ட நினைவுமலர். இம்மலரில் கோணேஸ்வரம் வரலாறு (திருத்தி வாசிக்கப்படுபவை/ஆலயம் அமைந்த வரலாறு/ அரசர்களின் திருப்பணிகள்/ மறுமலர்ச்சி/ பிற தொடர்புகள்/ வில்லூன்றிக் கந்தன்/ முடிவுரை), திருக்கோணமலைத் தேவாரத் திருப்பதிகம், திருக்கோணேஸ்வரம் நிகழ்ச்சிகள், திருமதி கணபதிப்பிள்ளை பத்மாசனி சிவபதமடைந்த திதி வெண்பா/ திருமதி கணபதிப்பிள்ளை பத்மாசனி அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21780).

ஏனைய பதிவுகள்

15852 நல்லம்மா: முதலாம் ஆண்டு நினைவு வெளியீடு.

அ.யேசுராசா. யாழ்ப்பாணம்: அ.யேசுராசா, குருநகர், 1வது பதிப்பு, நவம்பர் 2010. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், குருநகர்). 36 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×14 சமீ. அமரர் அத்தனாஸ் செபஸ்தியானா (நல்லம்மா) வின்

16939 பூங்குயில் 70.

பாகீரதி கணேசதுரை, சிவமலர் சுந்தரபாரதி (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: சோலைக்குயில் அவைக்காற்றுக் களம், 1வது பதிப்பு, நவம்பர் 2020. (யாழ்ப்பாணம்: அம்மா அச்சகம், இணுவில்). viii, 167 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 700., அளவு:

Score 100 Totally free Revolves

Blogs Gorgeous Graphics Better around three ports ever And then make Your first Deposit Exactly what gambling enterprises have free bet black-jack? You could gamble

14856 வள்ளுவரின் வழி நடப்போம்.

பா.விக்கினேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி இலக்கிய அணி, கிராம்புவில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், 276 கஸ்தூரியார் வீதி). viii, 127 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 19×12.5