நூல் ஆக்கக் குழுவினர். தெல்லிப்பழை: திருநாவுக்கரசு சிவபாக்கியம் பவளவிழா வெளியீடு, பன்னாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 225 பக்கம், புகைப்படங்கள், வரைபடம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. தெல்லிப்பழை பிரதேசத்தின் பன்னாலைக் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் திரு. கந்தையா திருநாவுக்கரசு அவர்களின் 75ஆவது அகவையை முன்னிட்டு வெளியிடப்படும் சிறப்பிதழ். இது திருநாவுக்கரசு சிவபாக்கியம் பவளவிழா வெளியீடாக 05.09.2005 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வூருக்குப் பெருமைசேர்க்கும் வகையில் அமைந்துள்ள இம்மலர் சென்றகாலத்தின் பழுதிலாத் திறத்தைதையும் இன்றைய சிறப்பையும் எடுத்துக்காட்டும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. இம்மலர் சைவாலயங்கள், பொன்னாலையில் குறியீடு பெறுவோர், அதிபர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், அஞ்சலக அதிபர்கள், நிர்வாகிகள் எனப் பல்துறை சார்ந்த இப்பிரதேசத்து மக்கள் பற்றிய ஆவணப்பதிவாகின்றது. விழாநாயகர் வாழ்க்கை வளம் என்ற பிரிவில் விழாநாயகர் திரு. கந்தையா திருநாவுக்கரசு அவர்கள் வாழ்க்கை வரலாறு, கல்வியிற் கலங்கரை விளக்கம் மனிதருள் மாணிக்கம் அதிபர் திருநாவுக்கரசு (மாவை. சேனாதிராசா), பன்னாலைக் கிராமத்தில் ஒரு பண்பாளர் (சி.சிவமகாராசா) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. நூல் ஆக்கக் குழுவில் சு.செல்லத்துரை, சொ.சண்முகலிங்கம், க.நடராஜர், அமிர்தயோகேஸ்வரி முத்துக்குமாரசாமி, சி.அப்புத்துரை ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37020).
Casino Inte med Svensk perso Tillstånd 2024
Content Dana Ett Konto Samt Tacka Givetvis Till Bonusen Alla Casinon Inte med Omsättningskrav Free Spins Genom Köpläge Casino Inte me Bankid Ultimata Online Kasinoen