14983 புகழ்பூத்த நீர்வேலி. த.

பரராசசிங்கம். யாழ்ப்பாணம்: காமாட்சி அம்மாள் இந்து பரிபாலன சபை, நீர்வேலி, 2வது பதிப்பு, மார்ச் 2014, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (யாழ்ப்பாணம்: கணபதி பிரிண்டர்ஸ், திருநெல்வேலி). 396 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ. சிவாசாரியார்களின் ஆசியுரையுடனும் கல்வியாளர்களின் வாழ்த்துரைகளுடனும் கிராமிய கீதத்துடனும் தொடங்கும் இந்நூலில், முதலில் இடம்பெறும் அமைவிடச் சிறப்பு, இலங்கை, யாழ்ப்பாணம், வலிகாமம், வலிகாமம் கிழக்கு என்பவற்றக்குரிய தனிச் சிறப்புக்களையும், சனத்தொகைப் பள்ளிவிபரங்களையும், கிராமத்தின் சிறப்பையும் அமைப்பையும் விளக்குகின்றது. தொடரும் இயல்களில், நிர்வாகச் சிறப்பு, வழிபாட்டுச் சிறப்பு, கல்விச் சிறப்பு, கமத்தொழிற் சிறப்பு, கைத்தொழிற் சிறப்பு, விருந்தோம்பற் சிறப்பு, கலைத்துறைச் சிறப்பு, விளையாட்டுத்துறைச் சிறப்பு, வைத்தியச் சிறப்பு, கூட்டுறவுச் சிறப்பு, சமூகசேவைச் சிறப்பு, சமயத் தொண்டுச் சிறப்பு, சிலைகளால் சிறப்பு, பெரியார் சிறப்பு, எழத்தாளர் சிறப்பு, எனப் பதினாறு தலைப்புகளின் கீழ் நீர்வேலி மண்ணின் பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பிரதேச வரலாற்றைப் பதிவுசெய்கின்றது. பல்வேறு துறைகளிலும் சிறப்புற்றுத் திகழ்ந்த பெரியார்கள், எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள் என்போரின் வாழ்க்கைக் குறிப்புகள் புகைப்படங்களோடு இடம்பெற்றிருப்பது சிறப்பாகும்.

ஏனைய பதிவுகள்