14986 வரணியின் மரபுரிமைகள்: பாகம் 1.

சி.கா.கமலநாதன். யாழ்ப்பாணம்: புராதன குருநாதர் கோயில், மாசேரி, வரணி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). xiv, 232 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 22×15 சமீ.,ISBN: 978-955-54774- 0-6. இந்நூல் யாழ்ப்பாணக் குடாநாட்டிலே தென்மராட்சிப் பிராந்தியத்தில் பழைமை கொண்ட பரந்த பிரதேசமான வரணிக் கிராமத்தின் மரபுரிமைகளைப் பாதுகாப்பதும் வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தவதுமாக விளங்குகின்றது. அறிமுகம், வரலாற்று வளர்ச்சியில் வரணி, வரணியில் கிடைத்த தொல்லியல் சான்றுகளின் முக்கியத்துவமும் இடப்பெயர்களும், பண்பாடும் வரணிப் பிரதேச இடப்பெயர்களும், முடிவுரை ஆகிய இயல்களில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளில் வரணிக் கோவிற்பற்றுப் பிரதேச இடப்பெயர்கள், வரணிப் பிரதேசத்திலுள்ள முக்கிய குளங்கள், பழைய கிராம சேவையாளர் பிரிவுகள் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56226).

ஏனைய பதிவுகள்

14914 எச்.எஸ்.இஸ்மாயில்: ஒரு சமூக அரசியல் ஆய்வு.

எம்.எஸ்.எம்.அனஸ். புத்தளம்: இளம் முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம், 1வது பதிப்பு, மே 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (4), 188 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

14858 அல் ஜாமிஆ: மூன்றாவது இதழ்-1422/2001.

ஆசிரியர் குழு. பேருவளை: நளீமிய்யா மாணவர்களுக்கான இதழ், ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமியா, தபால் பெட்டி எண் 1, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கல்கிஸ்சை: டெக்னோ பிரின்டர்ஸ், 7, 15A, பின்தலியா வீதி, மவுண்ட்