எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு: எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, நவம்பர் 2019. (சங்கானை: சாய்ராம் பிரிண்டர்ஸ்). V, 71 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38461-5-0. இலங்கையின் வடபிரதேசமான, யாழ்ப்பாண மாவட்டத்தில் கல்வி வளம், கலை வளம், கடல் வளம், என்பவற்றில் சிறப்புடையதாயும், வரலாற்றுச் சான்றுகளால் பெருமைப்படத்தக்கதாயும் அமைந்துள்ள பிரதேசமே வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவாகும். இந்நூல் இப்பிரதேசம் பற்றிய வரலாற்றையும், அப்பிரதேசத்து மக்களின் வாழ்வும் வளமும் பற்றிய பல்வேறு தகவல்களையும் பொது, அமைவிடம், நிர்வாகம், பணப்பரிமாற்றம், சட்டம் ஒழுங்கு, சமூக மட்ட செயற்பாடுகள், போக்குவரத்து, கூட்டுறவுச் சங்கம், தபாற்சேவையும் தொடர்பாடலும், மின்சார இணைப்புகள், பொதுச்சந்தை வியாபார நிறுவனங்கள், இயற்கை வளங்களும் மக்கள் பயன்பாடும், நெல்-உணவுற்பத்தி, கடல்வளமும் மீன்பிடித் தொழிலும், மக்களின் சுகாதாரம், மாணவர்களுக்கான கல்விச் சேவை, தொழில்புரிபவர்கள், சமூக சேவை-குடிநீர், மயானங்கள், மக்களின் ஆன்மீகத் தரிசனம், பொழுதுபோக்கு, சரித்திரச் சான்றுகள், கலைவளம், எழுத்தாளர்கள்/கவிஞர்கள் விபரம் ஆகிய தலைப்புகளின் கீழ் வழங்குகின்றது.