14999 கண்ணதாசன் பயணங்கள்.

கண்ணதாசன். சென்னை 600017: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, ஜுன் 2013. (சென்னை 5: புரோஸ்ஸ் இந்தியா). 144 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-81-8402-723-5. கவிஞர் கண்ணதாசன் இலங்கை, அமெரிக்கா, மலேசியா, ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தபின்னர் அவற்றைப் பயணக் கட்டுரைகளாகத் தமிழகப் பத்திரிகைகளில் எழுதிவந்தார். இவை தொகுக்கப்பெற்று 2000ஆம் ஆண்டில் ஆர்.பி.சங்கரன் அவர்களின் முயற்சியால் அவரது கங்கை புத்தக நிலையத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. அந்நூலின் மீள் பதிப்பினை கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன், தனது கண்ணதாசன் பதிப்பகத்தின் மூலம் மீள்பிரசுரமாக்கியுள்ளார். இத்தொகுப்பில் உள்ள ‘ஈழநாட்டில் ஈராறு நாட்கள்” என்ற தொடர் 1955இல் எழுதப்பட்டது. அது முழுமையாக தென்றல் பத்திரிகையில் வெளிவந்தது. ‘பர்ஷோஸ் பஸ்ஸ{பா” (மனமார்ந்த நன்றி என்ற அர்த்தத்தைக் கொண்டது) என்ற தலைப்பில் 1968இல் எழுதிய ரஷ்யப் பயணத் தொடர், தனது மாத இதழான கண்ணதாசனில் தொடராக வெளிவந்து, இடைநடுவில் கண்ணதாசன் மாத இதழ் வெளிவராது நின்று போனதால் அத்தொடரும் பாதியில் நின்றுபோனது. ‘மலேசிய நினைவுகள்” என்ற மலேசியப் பயணர் தொடர் 1972இல் எழுதப்பட்டு அலைஓசை இதழில் தொடராக வெளிவந்து அவரது திரைப்படத்துறையில் அதீத ஈடுபாட்டின் காரணமாக நேரமின்மையால் பாதியில் நின்று போனது. ‘இங்கே இரவு அங்கே பகல்” என்ற அமெரிக்கப் பயணக் கட்டுரை, அவர் 1981இல் பயணம் செய்துகொண்டிருக்கும் போதே குமுதம் இதழில் உடனுக்குடன் தொடராக வெளிவந்துகொண்டிருந்தது. அவரது அமெரிக்கப் பயணம் திட்டமிட்ட வகையில் பூர்த்திபெறாமல் போனதால் இத்தொடரும் முழுமைபெறவில்லை.

ஏனைய பதிவுகள்

‎‎‎‎game Of Thrones Slots Local Deposit 5 Play with 80 Casino On the App Storeh1>