15003 அறிவுக்கோர் ஆவணம்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கனடா: சேது இன்பொடெக்).

256 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14 சமீ.

பொன்.குலேந்திரன் யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ். பரியோவான் கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில்  பௌதிகத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்வேறு அரபு, ஐரோப்பிய நாடுகளில் தொலைத்தொடர்புத் துறையில் பொறியியலாளராகப் பணியாற்றி இறுதியாக கனடாவில் டெலஸ் தொலைத்தொடர்பு தாபனத்தில் சிரேஷ்ட முகாமையாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்றவர். கனடாவில் குவியம் என்ற இணையத்தளத்தை நடத்துபவர். இதே பெயரில் அறிவியல் சஞ்சிகையொன்றும் இவரால் நடத்தப்பட்டது. அதில் இடம்பெற்ற பெரும்பாலான அறிவியல் கட்டுரைகளை உள்ளடக்கியதாக இந்நூல் வெளிவந்துள்ளது. இலங்கைப் பரங்கியர், இலங்கையில் காப்பிரிகள், கொழும்புச் செட்டி, இலங்கையில் கரவர்கள், வேலனை வணங்கும் வேடுவர்கள், ஸ்ரீலங்கா மலேயர்கள், இலங்கையில் பட்டாணியர்கள், முக்கி முத்துக் குளித்த முக்குவர், இலங்கையின் நிட்டாவோ குள்ள இன மக்கள், ரிக்ஷோ வாகனம் ஏகாதிபத்தியத்தின் சின்னம், கிணற்று நீரை இறைக்க உதவும் துலா, இயற்கையில் வடிவமைப்புகள், இயற்கையில் உருமறைப்பு, இயற்கையும் மனிதனும், கடற்கோள்கள், மிருகங்களும் பறவைகளும் பூகம்பத்தை உணரக்கூடியனவா?, பறவைகளின் புலன்கள், கண்டி இராச்சியமும் தமிழ் நாட்டு நாயக்கர் அரச வம்சமும், யாழ் குடாநாடும் கேரளாவும், ஒல்லாந்தர் ஆட்சியின் போது யாழ் குடாநாடு, ஈழத்தின் பண்டைய துறைமுகங்கள், பரிசுத்தமாக்கும் ஒலி, தேவ-தாசி மரபும் பெண் அடிமைத்தனமும், ஒளியும் மதமும், தேடலும் பகிர்தலும், வசைக் கவிகள், விளக்குகளின் விளக்கங்கள், இலங்கையில் தொவில் நடனம், தீட்டு, யாழ் குடாநாட்டின் பண்டைய கட்டடக்கலை, செண்பகப் பெருமாள், கந்தகாரும் காந்தாரியும், கருந்துளை, சுதந்திரத்துக்கு முன்னர் பிரித்தானிய ஆட்சியில் நடந்த இனக்கலவரங்கள், இராமாயணமும் இலங்கையில் உள்ள இடப்பெயர்களும், பயங்கரவாதமும் மதமும், ஜனநாயகத்தில் அரசியல் சாம்ராஜ்யங்கள், தீக்குளிப்பு ஆகிய 38 தலைப்புக்களில் எழுதப்பட்ட அறிவியல் கட்டுரைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17528).

ஏனைய பதிவுகள்

Dollars Coaster Ports

Articles Enjoy Rummy Games Online For the Octro Playrummy Managing provider is an easy importance of me to in fact believe evaluating a casino. After