15004 அன்றைய போட்டி.

பாஞ்சாலன் எஸ்.ஜெகதீசன். கனடா: இளவாலை ஜெகதீசன் மின்நூலகம், 1வது பதிப்பு, மே 2021. (மின்நூல் வடிவம்).

xxvi, 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

24 மணி நேர வானொலியான கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் போட்டி நிகழ்ச்சித் தயாரிப்பாளராக 1996இல் இணைந்துகொண்ட எஸ்.ஜெகதீசன் குட்டிக் கதைகளுடன், குறுக்கெழுத்துப் போட்டிகளையும் நடத்திப் பிரபல்யமானவர். பாஞ்சாலன், சரமாவதி, பத்மவியூகன், பொன்னம்மா, தங்கப்பன், பூவாத்தா போன்ற புனைபெயர்களில்  அறிமுகமான இவரது சுவாரஸ்யமான 500 கேள்வி பதில்களை இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். இவை பூக்கள், பறவைகள், விலங்குகள், இசைக் கருவிகள், நாணயங்கள், உணவு, கைமருந்துகள், பெயர்பெற்ற பெண்கள், சங்ககால கடைச்சரக்குகள், அதில கொஞ்சம் இதில கொஞ்சம் என 10 தலைப்புகளின் கீழ் தலைப்புக்கு 50 கேள்விகள் என்ற ஒழுங்கில் விடைகளுடன் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

15589 மஹாகவி கவிதைகள்.

து.உருத்திரமூர்த்தி (மூலம்), எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: மஹாகவி நூல்வெளியீட்டுக் குழு, இணை வெளியீடு, பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜீன் 2021.