15005 ஆறுமுக அறிவுக் கலசம் : அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் நினைவு வெளியீடு.

ஆ.இரகுநாதன், ஆ.சண்முகநாதன். கரவெட்டி: அமரர் வேலுப்பிள்ளை ஆறுமுகம் குடும்பத்தினர், பிராமணன் தோட்டம், கரவெட்டி மேற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

viii, 114 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16 சமீ.

தமது தந்தையாரின் நினைவுமலராக 18.4.2009 அன்று ஆ.இரகுநாதன், ஆ.சண்முகநாதன் ஆகிய இரு புத்திரர்களால் தமது குடும்பத்தின் சார்பாக வெளியிடப்பட்ட நினைவு மலர் இது. அறிவுக்கும் வாழ்க்கைக்கும் பயனுள்ள பல விடயங்களைத் தாங்கி வெளிவந்துள்ள நூல். அறிவியல் (பசுமைப் புரட்சியின் ஆறுமுகங்கள்/நிறைவான வெற்றிக்கு முறையான கற்றல்/ உணவே மருந்து/ நேரம் ஒதுக்குங்கள்), மருத்துவம் (சிறுநீரகச் செயலிழப்பு/சுகமான வாழ்விற்கு நலமான இதயம்/ புற்றுநோயும் உணவுப் பழக்கங்களும்/ ஆஸ்துமா/ தாய்ப்பாலூட்டல்), கலைகள் (இளங்கோவின் பார்வையில் கற்பு/ வில்லாண்ட காவலரும் சொல்லாண்ட பாவலரும்/ நடன இசைக் கலைகளின் தொடர்பு), ஆன்மீகம் (ஆன்மீகமும் ஆரோக்கியமும்/ விரதங்கள்/ இத ஒரு தெய்வீக குணம்), தகவல் தொழில்நுட்பம் (கணனி ஒன்றை/ ஜீ.சீ.ஈ. சாதாரண தரம், ஜீ.சீ.ஈ. உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான../ நெட் மீட்டிங்), விளையாட்டு (வலைப்பந்தாட்டம்/ கிரிக்கெட் விதிமுறைகள்/ கூட்டு நிகழ்ச்சி/ ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் “மழை விதி”)ஆகிய ஆறு பிரிவுகளுக்குள் பல்வேறு துறைசார் கட்டுரைகள் அடங்குகின்றன. கலாநிதி கு.மிகுந்தன், எப்.எக்ஸ்.ஜெயச்சந்திரா, க.முகுந்தன் ஆகியோர் கட்டுரைகளை எழுதியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 56460).

ஏனைய பதிவுகள்

16186 இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல்: தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகள் : 3ஆவது தொகுதி 2000-2005.

சசங்க பெரேரா, தா.சனாதனன், பா.அகிலன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 199 A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424