15008 தேடல் பொக்கிஷம் (பகுதி 2).

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ. குருநாகல் : தாருல் குர்ஆன் வெளியீட்டுப் பணியகம், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கண்டி: வின்க்ஸ் கிராபிக்ஸ், கல்ஹின்ன).

viii, 9-56 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-42423-8-8.

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ அவர்களின் அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய நூல். இவ்விரண்டாம் பகுதியில் உயிரினங்களின் ஓட்ட வேகம், உலகின் நீளமான தொங்கு பாலங்கள், நீர், தேன் என்பவற்றின் சிறப்பு, இந்திய நாடு பற்றி, எவரெஸ்ட் சிகரம் பற்றி பல தகவல்கள் உள்ளன. புவித் தகவல்களுடன், விண்வெளிச் சாதனைகள், சர்வதேச முக்கிய தினங்கள், விட்டமின்கள், உலகின் முதல் மனிதர், முதல் மனிதர் அனுப்பப்பட்ட காலம், மனித உடலின் அறுபது அற்புதங்கள் பற்றி என பெரும்பாரும் ஒரு இஸ்லாமியப் பார்வையில் பொது அறிவு வினாக்கள் இடையிடையே இடம்பெற்றுள்ளன. கஃபாவின் கதவு, கஃபாவின் உட்பகுதி, கஃபாவைப் போர்த்தியுள்ள ஆடை போன்றவை பற்றிய தகவல்களும், முஸ்லிம்களின் ஐந்து வேளைத் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கோசையின் அதிசய தகவலும் இடம்பெற்றுள்ளன. உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்வியுடன் நூலாசிரியர் மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ  இவை அனைத்தையும் இரு தொகுதிகளைக் கொண்ட இந்நூலில் வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Ostmark

Content Winterberries $ 1 Kaution: Im Erreichbar Spielsaal unter einsatz von Handy Haben retournieren Bezahl-Apps pro das mobile Bezahlen in Ostmark Welches beste Kasino für

Wolf Runt Spelautomat Online

Content Spelfunktioner Och Slot Hur Du Åstadkomme Anspråk På Dina Spelautomatsvinster Slots Tillsamman Jackpott South Parkanläggning Spelautomat Somliga slots låter de utse vilken mer eller

15003 அறிவுக்கோர் ஆவணம்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கனடா: சேது இன்பொடெக்). 256 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14 சமீ.