15008 தேடல் பொக்கிஷம் (பகுதி 2).

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ. குருநாகல் : தாருல் குர்ஆன் வெளியீட்டுப் பணியகம், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (கண்டி: வின்க்ஸ் கிராபிக்ஸ், கல்ஹின்ன).

viii, 9-56 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-42423-8-8.

மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ அவர்களின் அறிவியல் தகவல்களை உள்ளடக்கிய நூல். இவ்விரண்டாம் பகுதியில் உயிரினங்களின் ஓட்ட வேகம், உலகின் நீளமான தொங்கு பாலங்கள், நீர், தேன் என்பவற்றின் சிறப்பு, இந்திய நாடு பற்றி, எவரெஸ்ட் சிகரம் பற்றி பல தகவல்கள் உள்ளன. புவித் தகவல்களுடன், விண்வெளிச் சாதனைகள், சர்வதேச முக்கிய தினங்கள், விட்டமின்கள், உலகின் முதல் மனிதர், முதல் மனிதர் அனுப்பப்பட்ட காலம், மனித உடலின் அறுபது அற்புதங்கள் பற்றி என பெரும்பாரும் ஒரு இஸ்லாமியப் பார்வையில் பொது அறிவு வினாக்கள் இடையிடையே இடம்பெற்றுள்ளன. கஃபாவின் கதவு, கஃபாவின் உட்பகுதி, கஃபாவைப் போர்த்தியுள்ள ஆடை போன்றவை பற்றிய தகவல்களும், முஸ்லிம்களின் ஐந்து வேளைத் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கோசையின் அதிசய தகவலும் இடம்பெற்றுள்ளன. உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்வியுடன் நூலாசிரியர் மௌலவி முஹம்மத் ரஸீன்-மழாஹிரீ  இவை அனைத்தையும் இரு தொகுதிகளைக் கொண்ட இந்நூலில் வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

11345 சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: மா.சின்னத்தம்பி, இயக்குநர், அபிவிருத்தி நிறுவன வெளியீடு, கொக்குவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி பிரஸ்). (6), 35 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 17×12 சமீ. அமரர்

16709 வாழ்க்கை பயணத்தில் தடம் மாறலும் தடுமாறலும்.

நிவேதா ஜெகநாதன். கொழும்பு 13: நிவேதா ஜெகநாதன், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (கொழும்பு 13: சண் கிராப்பிக் அன்ட் பிரின்டர்ஸ், 340, ஜம்பட்டா வீதி, கொட்டாஞ்சேனை). x, 109 பக்கம், விலை:

9416 உயிரியல் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.

வி.கே.கணேசலிங்கம். கொழும்பு: க.வி.குகாதரன், 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 6: பரணன் அசோஷியேற்ஸ், 403 1/1, காலி வீதி). vii, 113 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 29×21 சமீ., ISBN: 978-955-98185-7-1.