15012 பொது அறிவு: பகுதி 2.

செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).

xxxii, 97- 140 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 20×14 சமீ.

இந்நூல் பொது அறிவுக் கேள்வி பதில்களைக் கொண்டது. அரசாங்க உத்தியோகங்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான தகுதிகாண் பொதுப்பரீட்சைகளுக்குத் தோற்றுபவர்களுக்கும், தமது  திறனையும் அறிவையும் விருத்தி செய்து கொள்ள விரும்பும் பிறருக்கும் ஏற்றவகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட இந்நூலின் முதலாம் பகுதியின் தொடராக இதில் பக்க இலக்கமிடப்பட்டுள்ளது. முதற் பகுதியில் அத்தியாயங்கள் 1 முதல் 3 வரை இடம்பெற்றிருந்த நிலையில் இப்பகுதியில் 4 முதல் 7 அத்தியாயங்களில் முறையே பெரியார்கள் (ப.97-112), சுருக்கக் குறியீடுகள் (ப.113-117), வரலாறு-அரசியல்-பல்துறை (ப.118-138), இன்றைய பிரமுகர்கள் (138-140) ஆகிய தலைப்புக்களின் கீழ் பொது அறிவுத் தகவல்கள் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக மேலும் சில பொது அறிவுத் தகவல்கள் 32 பக்கங்களில் ரோமன் பக்க இலக்கங்களின் கீழ் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 83018).

ஏனைய பதிவுகள்