15016 ஈழத்தின் தமிழ் நாவலியல் : ஓர் ஆய்வுக் கையேடு.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வகமும், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜீன் 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xl, 754 பக்கம், விலை: ரூபா 3600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-678-6.

1856ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான நீண்டதோர் காலகட்டத்தில் இலங்கையில் வெளியான 1420 தமிழ் நாவல்கள் தொடர்பான ஆண்டுவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டதும், குறிப்புரையுடன் கூடியதுமானதொரு பாரிய தொகுப்பு இதுவாகும். நாவல்கள் தொடர்பான குறிப்புகளையும், அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய சிறிய அறிமுகத்தையும் நாவல் வெளியான வருடம், பதிப்பகம், உள்ளடக்கம் முதலான துல்லியமான தகவல்களையும் திரட்டித் தருகின்ற சமூகப் பயன்பாடு மிக்க அரியதோர் படைப்பு இது. ஈழத்தின் தமிழ் நாவலியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபடும் எவரும் தவிர்க்கமுடியாதவோர் உசாத்துணை ஆவணம் இது.

ஏனைய பதிவுகள்

12087 – வேதாரணிய புராணம்.

அகோரதேவர் (மூலம்), க.வேற்பிள்ளை (பரிசோதித்தவர்). யாழ்ப்பாணம்: அ.அப்பாக்குட்டியாபிள்ளை, தேவஸ்தான பிரதம இலிகிதர் (தேவஸ்தானம் ஹெட் கிளார்க்கு), வேதாரணிய தேவஸ்தானம், வரணி, 1வது பதிப்பு, 1898. (சென்னபட்டணம்: ஸ்ரீ லலிதா அச்சியந்திரசாலை). 467+20 பக்கம், விலை: