15017 நானும் எந்தன் நூல்களும்: பாகம் 2.

ஈழத்துப் பூராடனார். (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, சீவன் பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, 2002. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம், 1109 பே ஸ்ட்ரீட்;, ரொாரன்ரோ, ஒன்ராரியோ M5S 2B3).

xx, 229-596 பக்கம், விலை: கனேடிய டொலர் 25.00, அளவு: 21×14 சமீ.

ஈழத்துப்பூராடனார் பல்வேறு நூல்களை எழுதியதுடன் அந்நூல்கள் யாவும் இன்று கிடைக்காமையை உணர்ந்து தான் எழுதிய ஒவ்வொரு நூல்பற்றிய விவரங்களை அறிவிக்கும் வகையில்  ”நானும் எந்தன் நூல்களும்” என்னும் பெயரில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அத்தொடரில் இரண்டாவது தொகுதி இதுவாகும். ஆடிப்பாடும் பருவப் பாடல்கள், பாடும் பருவப் பாடல்கள், இயேசு கீதை, தமிழ் அச்சுக்கலையில் மின் கணனி எனும் கொம்பியூட்டரின் பிரவேசம், ஐந்திணைப் பிள்ளைத் தமிழ், மட்டக்களப்புச் சொல்வெட்டு, பெத்தலேகம் குறவஞ்சி உரைகண்டு பதிப்பித்தது, தமிழழகி  -2ஆம் காண்டம், தமிழ் இலக்கங்களும் தமிழ் தழீஇய வட ஒலி எழுத்துக்களும், உள்ளதான ஓவியம் உரைகண்டு பதிப்பித்தது, கனடியக் குறவஞ்சி, பாவலர் குறவஞ்சி, கைக்கிளையம், கிழக்கிலங்கை மண்ணின் புகழ்பூத்த மைந்தர்கள், எழுத்துச் சீர்திருத்தச் சிந்தனைகள், சாகர சரிதம், விபுலானந்தர் கல்விச் சிந்தனைகள், காலகட்டம், வதனமார் வழிபாடு ஒரு மதிப்பீடு, இருபாங்கு கூத்து சரித்திரம், மூனாக்கானா, மட்டக்களப்புச் சொல்லிலக்கணம், பக்தி அருவி, கிழக்கிலங்கை மண்ணின் பகழ் பூத்த மைந்தர்கள்-2, கிழக்கிலங்கை மக்களின் எழுதா இலக்கியங்கள், வயலும் வாரியும், வசந்தன் கூத்து, கிழக்கு ஈழ மரபுவழி இரு பாங்கு மரபுக் கூத்துக்கலை ஆய்வுக்கான தகவல் திரட்டு, கூத்துக்கலைத் திரவியம், இலங்கைப் பாடசாலைப் பாடப் புத்தக வரலாறு, இருபாங்குக் கூத்துக் கலைஞன் எஸ்.ஈ. கணபதிப்பிள்ளை-கலையும் பணியும், கனடாவில் இருபாங்குக் கூத்துக்கலை, பறவைகளை வரைவதெப்படி, நிழல் மின் கணனி அச்சமைப்பின் முதற் பத்திரிகை வரலாறு, செட்டிபாளையம் கணபதிப்பிள்ளைப் புலவர் நூற்றிரட்டு, எங்கள் F.X.C. ஐயாவுக்கு அகவை எண்பது, விபுலானந்தர் பாவியம், நாவலர் பெருமான் வாழ்க்கைக் குறிப்புகள் ஆகிய நூல்கள் பற்றிய விளக்கம் இந்நூலில் தரப்பட்டுள்ளது. ஈழத்துப்பூராடனார் தனது இளம் வயதிலேயே எழுதத் தொடங்கி விட்டார். தம் பெயரிலும், கதிர், கதிர்வள்ளிச்செல்வன், பூராடனார், ஈழத்துப்பூராடனார் என்னும் பெயர்களிலும் பல்வேறு கதை,கட்டுரை, திறனாய்வு, கவிதை, மொழிபெயர்ப்புகள் எனப் படைத்துள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3261). 

ஏனைய பதிவுகள்

Maria Starzino app-inloggning Casino

Content Starzino app-inloggning | Casinospel Hos Turbo Vegas Miniguide: Odla Lirar N Villig Nya Online Casinon Välkomstbonusar Åt Nya Spelare Hos Casinoluck Utpröva Populära Slotsspel

Spingenie Gambling enterprise

Content What is the Difference in 100 percent free Gamble Games No Deposit Video game? Totally free Spins No deposit Bonus From the Trend Local

7 wartości funkcjonowania w uciechy planszowe

Content Online baccarat | Automaty sieciowy owe środek na uzyskanie pomocniczych nakładów w życie Jakie znajdują się najkorzystniejsze rozrywki siódemki? Kasyna krajowe internetowego, gdzie możemy