பிரேமதாசன் பிரசாந்தன்;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 129 பக்கம், விலை: ரூபா 650., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-693-9.
ஒரு நூலகத்தில் ஆவணங்களை ஒழுங்கமைப்பதில் பகுப்பாக்கம், பட்டியலாக்கம் ஆகியன பிரதான பங்களிப்பைச் செய்கின்றன. இவ்வகையில் பட்டியலாக்கம் தொடர்பாக மிகவும் எளிதாக அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுகம், ஆங்கிலோ அமெரிக்கப் பட்டியலாக்க விதிமுறைகள்- ஒரு வரலாற்று நோக்கு, ஆங்கிலோ அமெரிக்கப் பட்டியலாக்கத்தின் கட்டமைவு, பட்டியலாக்கத்தின் குறியீடுகளின் பிரயோகமும் தகவலைப் பெறுவதற்கான மூலங்களும், பட்டியலாக்கத்தில் அணுகுமுனைகளின் தெரிவு, நிகழ்நிலை பொது அணுகும் பட்டியலும் ஏனைய பட்டியல் வடிவங்களும், பகுத்தாய்வு காணும் பட்டியலாக்கம், கூட்டுறவுப் பட்டியலாக்கமும் மட்டுப்படுத்தப்பட்ட பட்டியல் பதிவுகளும், பட்டியல் பதிவுகளை கோவைப்படுத்தும் விதிகள் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக பட்டியலாக்கப் பயிற்சிகள், மாதிரி வினாக்கள், கலைச்சொற்கள் என்பன சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் கல்விசார் சிரேஷ்ட உதவி நூலகராகவும் நிறுவக நூலகத்தின் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.