என்.செல்வராஜா. யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மே 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 155 பக்கம், புகைப்படங்கள்;, விலை: ரூபா 600., அளவு: 22×15சமீ., ISBN: 978-624-97823-0-3.
ஈழத்து நூல்கள் சார்ந்து தமிழ்த் தேசிய நூலகம் ஒன்றின் அவசியம் பற்றி இந்த நூலில் உள்ள சில கட்டுரைகள் பேசுகின்றன. இலங்கையை பொறுத்தவரை தேசிய நூலகமானது தமிழ் நூல்கள், படைப்பாளிகள் சார்ந்து சீரிய முறையில் செயற்படுவதில்லை. அவர்களின் கரங்கள் வடக்கு-கிழக்கை எட்டுவதில் பாரிய பின்னடைவுகள் உள்ளன. இவ்வாறான புறக்கணிப்புக்கள், சீரற்ற ஆவணமாக்கல் நடைமுறைகள் போன்றவற்றால் நாம் எத்தகைய இழப்புகளைச் சந்தித்து வருகின்றோம் என்பதை சில கட்டுரைகள் எமது சிந்தனையைத் தூண்டுகின்றன. இதற்குத் தீர்வாக ஈழத்தவரின் தமிழ்த் தேசிய நூலகம் ஒன்றின் உலகளாவிய தேவையை திரு என். செல்வராஜா இக்கட்டுரைகளில் வலியுறுத்துகிறார். இத்தொகுப்பில் வட-கிழக்கில் பிராந்திய நூலகச் சிந்தனைகள், இலங்கைத் தேசிய நூலகத்தின் தமிழ் சார்ந்த வெளியீடுகள்: தேசிய எழுத்தாளர் பட்டியல், மீண்டும் ஒரு தடவை கடந்து போயிற்று, வளரும்போதே அறிவையும் கொஞ்சம் தேடுவோம், வாருங்கள், தடைசெய்யப்பட்ட நூல்களால் ஆனதொரு நினைவாலயம், ஈழத்துத் தமிழ் நூலியல் உலகில் சிறப்பு மலர்கள், ஆண்டு மலர்களுக்கான வழிகாட்டிகள் மற்றும் சுட்டிகளின் பயன்பாடு, யாழ்ப்பாணத்தில் இந்தியப் புத்தகக் கண்காட்சியும் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகமும், ஒரு லண்டன் கடிதம், ஆவணஞானி குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், பிரதேச வரலாற்று மூலங்களில் தீவகம்: ஓர் அறிமுகம், புங்குடுதீவு பிரதேச வரலாறு கூறும் சில நூல்கள், தமிழாராய்ச்சி மாநாடுகளும் தமிழின் பெருமை பேசும் மாநாடுகளும்: காலத்தின் தேவை என்ன?, மோகனாங்கி: வெளிச்சத்துக்கு வந்துள்ள ஈழத்தவர் படைப்பிலக்கியம் ஒன்று, திபெத்தின் மடாலயச் சுவர்களின் பின்னால் கரந்துறைந்த மாபெரும் பண்டைய நூலகம், Revitalizing National Library Services through Regional Library and Documentation Centres (RLDCS)-Sri Lankan Perspectives ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது.