15024 நூலகப் பகுப்பாக்க அடிப்படைகள்.

செ.சாந்தரூபன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 120 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-704-2.

அறிமுகம்-நூலகப் பாகுபாடு (வரைவிலக்கணம், வரலாறு, பகுப்பாக்கத்தின் தேவையும் நோக்கங்களும்), நூலகப் பகுப்பாக்க வகைகள் (எண்ணிடற் பகுப்பாக்கமுறை, முக்கூற்றுப் பகுப்பாக்கமுறை, சிறந்த பகுப்பாக்கமொன்றின் இயல்புகள்), நூலகப் பகுப்பாக்கத்தின் அம்சங்கள் (அட்டவணை, சுட்டி, குறியீடு, அழைப்பெண்), நூலகப் பகுப்பாக்க நடைமுறைகள் (ஆவணத்தின் விடயத்தையும் துறையையும் தெரிவுசெய்தல், நூலகப் பகுப்பாக்கத்தின் போது கருத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள், பரந்த பகுப்பாக்கமும் அண்மித்த பகுப்பாக்கமும், வருகையிட ஒழுங்கு), தூயி தசமப் பாகுபாடு (அறிமுகம், அடிப்படைக் கட்டமைப்பு, தூயி தசமப் பாகுபாட்டின் திருத்தற் கொள்கை, இணையத் தூயி), தூயி தசமப் பகுப்பாக்கத்தில் பகுப்பாக்கம் செய்தல், DDC பற்றிய ஒரு மதிப்பாய்வு (சிறப்பம்சங்களும் குறைபாடுகளும்), அனைத்துலகத் தசமப் பகுப்பாக்கம், காங்கிரஸ் நூலகப் பகுப்பாக்கம், கோலொன் பகுப்பாக்கம், புத்தகம் ஒழுங்குபடுத்தும் முறை, சங்கிலிச் சுட்டியாக்கம் ஆகிய 12 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் சிறப்புத் துறையில் இளமாணிப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நூலகவியல் மற்றும் தகவல் விஞ்ஞானத்துறையில் முதுமாணிப்பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சூழலியல் விஞ்ஞானத்துறையிலும் பிரயோகப் பள்ளிவிபரவியல் துறையிலும் முதுமாணிப் பட்டங்களையும் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Sloturi Și Păcănele Geab Online

Content 300 shields Slot Real Money | Bonusuri În Cazinouri Online Germania Tu 5 Cele Mai Bune Loterii Internaționale Tu Sloturi Netent Dintr România Aceasta