15025 மட்டக்களப்பின் தொன்மையும் தொடர்பாடலும்: தமிழை மையப்படுத்திய ஒரு வரலாற்று நோக்கு.

ஸ்ரனிஸ்லாஸ் மோசேஸ். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 2020. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

ஏழாவது அனாமிகா நினைவுப் பேருரையாக 26.12.2020 அன்று நிகழ்த்தப்பட்ட உரையின் நூல்வடிவம். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளர் கலாநிதி மோசஸ் அவர்களின் மட்டக்களப்பின் தொன்மையும் தொடர்பாடலும்: தமிழை மையப்படுத்திய ஒரு வரலாற்று நோக்கு என்ற தலைப்பில் ஆற்றப்பட்டிருந்தது. மட்டக்களப்பின் வரலாற்றுத் தொன்மையைப் பற்றிய ஒரு குறிப்பு, தொன்மைத் தமிழுக்கு மட்டக்களப்பு வழங்கியுள்ள பங்களிப்பு, மட்டக்களப்பின் தொடர்பாடலைப் பற்றிய விளக்கம், மட்டக்களப்பில் தகவல் தொடர்பாடல், மட்டக்களப்பில் தகவல் தொடர்பு சாதனங்கள், முடிவுரை ஆகிய உபதலைப்புகளில் இப்பேருரை நூல்வடிவம் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Casinos on the internet Free Spins

Posts Contrast All the No deposit Added bonus Codes On the internet Banking Choices: Deposit and Detachment Actions Suggestions From Gambling Professionals Simple tips to

15283 இலங்கை பற்றிய கற்கைகள்: விஞ்ஞானமாணிப் பாடநெறி (மட்டம்-3, துண்டம்-2).

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம். நுகேகொட: இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், நாவல, பதிப்பு ஆண்டு விபரம் தரப்படவில்லை. (நுகேகொட: திறந்த பல்கலைக்கழகப் பதிப்பகம், நாவல்). (4), 116 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×20