15028 பட்டறை வருடாந்த சஞ்சிகை (அறுவடை-1).

வெ.அழகரெத்தினம் (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: செட்டிபாளையம் பொது நூலகம், பிரதான வீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, 2019. (மட்டக்களப்பு: துர்க்கா அச்சகம்).

xii, 89 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×18  சமீ., ISSN: 2706-0322.

செட்டிபாளையம் பொது நூலகத்தால் வருடாந்த சஞ்சிகையாக பட்டறை வருடா வருடம் வெளியிடப்படும் நோக்குடன் தனது முதலாவது இதழை 2019இல் வெளியிட்டுள்ளது. இப்பிரதேசத்தின் படைப்பாளிகளின் ஆக்கங்கள் இவ்வாண்டிதழில் இடம்பெறுகின்றன. செட்டிபாளைய நூலக வரலாறு, அதிர்ச்சிக்குள்ளாக்கியவரை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதற்கு உளரீதியாக ஊக்கம் அளிப்பதற்கு உதவுதல், அறிவு முகாமைத்துவம், நூலக வரலாறும் தற்காலமும், பாடசாலை சூழலில் ஆசிரியர்களின் கடமைகள் மற்றும் சிறுவர் உரிமைகள், பிள்ளைகளின் கற்றலை ஊக்குவிப்பதில் பெற்றோரின் பங்கு, செட்டிபாளையம் இடப்பெயர் வரலாறு, சூழலும் நாமும், நாட்டார் இலக்கியமும் நம்மவர் வாழ்வும், நமது சிந்தனை, நானும் புறா தான், விஞஞானக் கண்டுபிடிப்புகள், பொது நூலகமும் வாசிப்பும், செட்டிபாளைய சிந்தனைச் செல்வன் கவிஞர் மயில்வாகனத்தின் படைப்புலகம், சித்த வைத்தியத்தின் மகிமை, கிழிந்த புத்தகத்தின் சுயசரிதை, போதைப் பொருட்களின் தாக்கம், சோதிடம் ஒரு தெய்வீகக் கலை, ஆரோக்கிய வாழ்க்கையின்றி அமையாது சுக வாழ்வு, கற்றலின் சிறப்பு, வாசி நேசி, நீரின் மகிமை, வாசிப்புப் பழக்கத்தோடு பயணித்த மனிதர்கள் சிலர், உழைப்பின் மகிமை, பொது அறிவு ஆகிய தலைப்புக்களில் சுவையான விடயங்கள் பலவற்றை உள்ளடக்கி இவ்வாண்டிதழ் மலர்ந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66004).

ஏனைய பதிவுகள்

Ato Sem Depósito Casino 2024

Content Preciso Me Averbar Para Aderir Os Bônus? – Virtual Football Bundesliga Revisão Açâo Acostumado De Slots E Jogar Gratis Uma vez que Os Bonus