15029 மல்லிகை 37வது ஆண்டு மலர்.

டொமினிக் ஜீவா (ஆசிரியர்). கொழும்பு 13: மல்லிகை, 201-1/1, ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (கொழும்பு 13: யூ கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்தா மேடு).

132 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 24.5×18.5 சமீ.

15.08.1966 அன்று ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை உலகில் கால்பதித்து 37 ஆண்டுகளைக் கடந்துவிட்ட மல்லிகை மாத இதழின் ஆண்டுச் சிறப்பிதழ் இதுவாகும். இதில் எல்லா இரவுகளும் விடியும் (டொமினிக் ஜீவா), நான் பேசுவது, எழுதுவது மானுடத்தின் மொழி (டொமினிக் ஜீவா), தனிமை (சிறுகதை, முருகபூபதி), மார்க்கண்டேயர்கள் (குறுநாவல், செங்கை ஆழியான்), மனித தரிசனங்கள் (சிறுகதை, சுதாராஜ்), முட்டுப்பாடு (கவிதை, ஸ்ரீபிரசாந்தன்), ஈழத்து நவீன இலக்கிய மொழிபெயர்ப்பு முயற்சிகள் ஒரு நோக்கு. (செ.யோகராசா), நீ என்னை நினைத்துப் பார்ப்பதுண்டா? (கவிதை, பெனி.யே.ச), நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி: எச்.எம்.பி.யோடு பெர்லினில் (ஓ.ஏ.ராமையா), அர்த்தங்கள் (சிறுகதை, நந்தி), தொலைந்தன தொல்லை எல்லாம் (கவிதை, புருஷோத்தம ஞானி), ஞானம் (சிறுகதை, ப.ஆப்டீன்), சிதம்பர ரகுநாதன் (க.கைலாசபதி), முடியுமா உங்களால்…? (கவிதை, லக்ஸ்மன்), எங்கு மூத்தம்மா தங்க மூத்தம்மா (சிறுகதை, எஸ்.முத்துமீரான்), வாய்ப் பந்தல் (கவிதை, கவிஞர்.ஏ.இக்பால்), எழுத்துச் சோறு போடுகிறது (உடுவை எஸ்.தில்லை நடராசா), கலாகேசரி ஆ.தம்பித்துரை: தேர்க்கலை ஆய்வும் விளக்கமும் (முருகையன்), வெளி (கவிதை, மேமன்கவி), மலையகச் சிறுகதைத் தொகுதிகள் (தெளிவத்தை ஜோசப்), பேய்கள் சப்பிய மாங்கனி மாதிரிப் படம் (கவிதை, முல்லை முஸ்ரிபா), முறிந்த சிறகுகளும் அக்னிச் சிறகுகளும் (எஸ்.எம்.ஜே.பைஸ்தீன்), சிட்டுக் குருவிகளும் வானம்பாடியும் கயிலாசநாதன் காணும் சமுதாயம் (கே.எஸ்.சிவகுமாரன்), ஈழத்துச் சமகால நாடகப் புரட்சியின் தாய் குழந்தை ம.சண்முகலிங்கம் (பா.இரகுவரன்), காயமுறும கலாசாரம் (சிறுகதை, பத்மா சோமகாந்தன்), போரின் தழும்புகளைப் பூமி சுமக்கிறது (கவிதை, சோ.பத்மநாதன்), மல்லிகைச் சிறுகதைகள் (செங்கை ஆழியான்), அப்பாவின் கடிதம் (சிறுகதை, மொஹிடீன் ரஜா), நல்லதோர் வீணை செய்து (கவிதை, இ.ஜெயராஜ்), நந்தா கவனத்தில் எடுக்க வேண்டிய திரைப்படம் (எம்.கே.முருகானந்தன்), மல்லிகை நூலகம் (நூல் அறிமுகக் குறிப்புகள்), துரை சுப்பிரமணியத்திற்கு நிரந்தரப் பதிவு தேவை (மா.பாலசிங்கம்), அருட்கொடை (சிறுகதை, திக்குவல்லை கமால்), ஈரம் (சிறுகதை, மு.பஷீர்), அம்மாப் பைத்தியம் (சிறுகதை, அருண் விஜயராணி) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23937).

ஏனைய பதிவுகள்

Casinostugan Tilläg & Utvärdering

Content Kasino Valley of the Gods | Ledtråd Kungen Hur Ni Hämtar Den Ultimat Välkomstbonusen Related Casino News Casinostugan Section Types Hurdan Tar Jag Stadga