சுதர்சன் ஜெயலட்சுமி (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: சுன்னாகம் பொது நூலகம், வலிகாமம் தெற்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, மார்ச் 2021. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 76 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ.
சுன்னாகம் பொது நூலகத்தின் சஞ்சிகையாக சித்திரை-ஆடி 2007இல் தனது முதலாவது இதழை ஆண்டுக்கு மூன்று இதழ்கள் என்ற ரீதியில் வெளிக்கொணரும் நோக்கில் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டுவந்த வெள்ளிமலை சஞ்சிகை இடையில் வருகை தடைப்பட்டிருந்து மீண்டும் 2017 முதல் ஆண்டு சஞ்சிகையாக வெளிவரத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டிற்குரிய இவ்விதழில் நற்றமிழ் காப்போம் (உடுவில் அரவிந்தன்), இயற்கை அன்னையின் கொடையே மண்வளம் (அ.அமிர்தலோஜனன்), அடிமை விலங்குடைப்போம் வாரீர் (உடுவிலூர் கலா), வாழுந் தமிழ்மொழி (சி.ச.சு.நேமி), ஒற்றுமையின் மொழி (ஆ.கர்ஷிகா), கருவிலிருந்து (கவிதா சுரேஸ்), பொதுசன நூலகங்களில் சமுதாய தகவற் சேவைகள் (கோமதி முருகதாஸ்), இரண்டாம் உலகப்போருக்கான காரணங்கள் (ர.நிஷா), அறிவுசார் சமூக உருவாக்கத்தில் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையங்கள் (மாணிக்கம் தேவகாந்தன்), நான் யாருக்கு என்ன பாவம் செய்தனான்? ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? (க.பிரசாத்), நழுவிச் செல்லும் நடைமுறைகள்-ஒரு பார்வை (றஜனி நரேந்திரா), யாழ் பொது நூலகமும் திருமதி ஸ்ரீ அருளானந்தமும் (சபாரட்ணம் தனபாலசிங்கம்), இளையோருக்கான பயிற்சிப் புத்தகங்களும் பொது நூலகர் விழிப்புணர்வும் (என்.செல்வராஜா), கொரொனா வைரசை எதிர்கொள்வதில் நலன்பேண் உளவியலின் பங்களிப்பு (எஸ்.திவ்யா), பெண்ணியம் காப்போம் (ஆ.வாஹினி) ஆகிய 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.