15031 ஜீவநதி : ஆறாவது ஆண்டு நிறைவு மலர்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

140 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 25×18.5 சமீ., ISSN: 2012-7707.

ஜீவநதியின் ஆறாவது ஆண்டு சிறப்பிதழில், கானலைக் கடத்தல் (முருகேசு ரவீந்திரன்), பார்வை (முருகபூபதி), கவந்தம் (இ.சு.முரளிதரன்), படமுடியாது, இனித்துயரம் (க.பரணீதரன்), அவரும் அவர்களும் (க.சட்டநாதன்), தவிச்ச முயல்கள் (இராசேந்திரம் ஸ்ரலின்), சமாதான நீதவான்கள் (சி.சித்திரா), மனிதத்தின் மனித ஓலம் (தெணியான்), அம்மாவும் தீபனும் (மு.சிவலிங்கம்), வசதியின் வாய்க்குள் (சி.யோகேஸ்வரி), தீயதை சேராதே (வி.ஜீவகுமாரன்), அமைச்சரின் முகம் (மலரன்பன்) ஆகிய சிறுகதைகளும், ச.முருகானந்தன், த.அஜந்தகுமார், பாலமுனை பாறூக், ஷெல்லிதாசன், தியத்தலாவ எச்.எவ்.ரிஸ்னா, வேரற்கேணியன், வே.ஐ.வரதராஜன், த.ஜெயசீலன், புலோலியூர் வேல்நந்தன், வெற்றி துஷ்யந்தன், நிலாதமிழின்தாசன், மேமன்கவி, கு.றஜீபன், கா.தவபாலன், வெலிகம ரிம்ஸா முஹமத், கல்வயல் வே.குமாரசாமி, சோ.பத்மநாதன், ஈழக்கவி ஆகியோரின் கவிதைகளும், எதிர் விசைப்பு இலக்கியம் (சபா.ஜெயராசா), இலக்கியங் காவிகளும் இனி வருங்காலங்களும் (க.நவம்), 1980 களுக்குப் பின்னர் ஈழத்துக் கவிதைகளில் சூழலமைவு (சி.ரமேஸ்), மட்டக்களப்பின் மூத்த தலைமுறைப் புலமையாளர் வ.சிவசுப்பிரமணியம்: ஒருஅறிமுகம் (செ.யோகராசா), ஒல்லாந்தர் கால ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளிப்பாட்டில் கூழங்கைத்தம்பிரான் (ந.குகபரன்), நாவல் இலக்கியத்தில் காலமும் களமும் கையாளப்படும் முறை: நீண்ட பயணம் நாவலை அடிப்படையாகக் கொண்ட ஒரு நோக்கு (அ.பௌநந்தி), சத்தியத்தின் நித்திய தரிசனம் மகாத்மா காந்தி (கெகிறாவ ஸூலைஹா), அமைப்பியல் நோக்கில் மட்டக்களப்பு தமிழ் நாட்டார் கதைகள் (கோபாலப்பிள்ளை குகன்) ஆகிய கட்டுரைகளும், “தம்பியைப் பேச விடுங்க” அ.யேசுராசாவின் நேர்காணலும், அம்மாவின் உலகம் இது கலாமணியின் உலகமும் கூட (எம்.கே.முருகானந்தன்), சினிமா: என்றென்றும் வியக்கத்தக்க மொழி (ஐபார்), அகிலின் கூடுகள் சிதைந்த போது சிறுகதைகளை முன்வைத்து (அநாதரட்சகன்), புதிய கண்ணோட்டங்களும் புதிய அர்த்தங்களும் (தம்பு சிவா), போர் தின்ற பெண்கள் விஸ்ணுவர்த்தினியின் “நினைவு நல்லது வேண்டும்” தொகுதியை முன்வைத்து (அ.வதனரேகா) த.ஜெயசீலனின் “எழுதாத ஒரு கவிதை” கவிதை நூலை முன் வைத்து ஒரு நோக்கு (பெரிய ஐங்கரன்), ஏனிந்தத் தேவாசுர யுத்தம்? மீதான பார்வை (கே.எஸ்.சிவகுமாரன்) ஆகிய நூல் விமர்சனங்களும், “ஏற்றம்” என்ற தலைப்பில் வேல் அமுதன் எழுதிய குறுங்கதையும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Espaces Non payants Sans Annales

Satisfait Mon Salle de jeu Un peu En compagnie de Bonus 1$ De Conserve Trouvez Winoui Casino Sauf que De telles compétences 1500 Jeu Levelup