15032 ஜீவநதி : ஒன்பதாவது ஆண்டு மலர்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

140 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 29×21  சமீ.

ஜீவநதியின் 90ஆவது இதழ், ஒன்பதாவது ஆண்டு மலராக மலர்ந்துள்ளது. இந்த இதழில் திறனாய்வும் இலக்கியச் சுவையின் வர்க்கச் சார்புடைமையும் (சபா ஜெயராசா), பேரவலத்தின் நிழல் கவிந்த தனிமை ஆழியாளின் கவிதைகள் (சி.ரமேஷ்), டேவிட் யீடனின் “பூமி இளையதாயிருக்கையில்” நூலுள் உள்ளம் தொலைத்து (கெகிறாவை ஸீலைஹா), ஸ்பானிய இலக்கிய வளர்ச்சி (இப்னு அஸ{மத்), தொல்லை தரும் தொழில்நுட்பமும் தொலைவுறும் படைப்பாற்றலும் (க.நவம்), ரோமியோ, யூலியட் மற்றும் இருள் (அ.யேசுராசா), அங்கதநாயகன் Counter மணி (இ.சு.முரளிதரன்), சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்பதை சிங்ககத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என மாற்றி அமைப்போம் (சமரபாகு சீனா உதயகுமார்), சமூக அக்கறை மிக்க இலக்கிய ஆளுமை இ.சு.முரளிதரன் (அ.பௌநந்தி), இளைஞர்கள் பார்வையில் பேதமுண்டா? (மஞ்சுமோகன்), சங்க அகத்திணையின் என்றும் அழியாத கவித்துவ யௌவனம் (ஈழக் கவி), தனித்துவம் மிக்க தாயக எழுச்சிப் பாடல்கள் அகம்சார் உணர்வலைகளை முன்வைத்து (வெற்றி துஷ்யந்தன்), முதல் ஐரோப்பியத் தமிழ் அறிஞர் கென்றிக் கென்றிக்கஸ் அடிகளாரே மன்னாரின் முதல் மறைப்பணியாளர் (தமிழ் நேசன் அடிகளார்), த கிளப் (ரதன்) ஆகிய 14 கட்டுரைகளுடன், 11 கவிதைகள், 8 சிறுகதைகள், கவிதாலட்சுமியின் நேர்காணல், ஐந்து நூல் விமர்சனங்கள், வை.வன்னியசிங்கத்தின் எதிர்வினை என்பனவும் இடம் பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Speel 7900+ Voor Online Bank Spellen

Inhoud Pirates gold spelen | Uitkering van in strafbaar casino winsten Watje bedragen de grootste verschil tussen fysieke slots plus offlin slots? Moet ik software