15033  ஜீவநதி : கனடாச் சிறப்பிதழ்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

60 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 25.5×18 சமீ.

2012இல் ஈழத்தில் இருந்துவரும் சிறந்த சஞ்சிகைக்கான ”சின்னப்ப பாரதிவிருது”, சிறந்த சிற்றிதழுக்கான ‘இனிய மணா இலக்கிய விருது” முதலிய விருதுகளை இந்தியாவில் பெற்றுக்கொண்ட சிற்றிதழ் ஜீவநதியாகும். அவுஸ்திரேலியச் சிறப்பிதழ் வெளிவந்து மூன்று மாதங்களில் 48ஆவது இதழ் கனடாச் சிறப்பிதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் கனேடியத் தமிழர்களின் கலை இலக்கிய வாழ்வியல் (சுல்பிகா), நொறுங்குண்ட இருதயம் ஓர் அரிய நாவல் (மணி வேலுப்பிள்ளை), எட்டாவது சிகரம் (அ.முத்துலிங்கம்), போதனையைக் காதலியுங்கள்-ஆசானை அல்ல (திரவியம் சர்வேசன்), பிரசவ வேதனைப் புதினம் (வீரகேசரி மூர்த்தி), DNA – M130 (முருகேசு பாக்கியநாதன்), கனடாவில் பல்கலைச்செல்வன் திவ்வியராஜனின் கலை இலக்கியப் பங்களிப்புக்கள் (எஸ்.சந்திரபோஸ்) ஆகிய கட்டுரை ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. நிவேதா, தமிழ்நதி, கறுப்பி, திருமாவளவன், ஆக்டோவியா பாஸின் (தமிழாக்கம் டிசே தமிழன்), ஆனந்தபிரசாத், மயூ – மனோ, சேரன் ஆகியோரின் கவிதைகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. சிறுகதைகளாக- ஸரகோதாசனும் கரப்பான் பூச்சிகளும் (தேவகாந்தன்), மனசே மனசே (ஸ்ரீரஞ்சனி), காலத்தைக் கடக்கும் படகு (மெலிஞ்சிமுத்தன்), அபஸ்வரங்கள் (த.மைதிலி), வீட்டைக் கட்டிப்பார் (வ.ந.கிரிதரன்) ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன. கனேடிய தமிழ் எழுத்தாளர் க.நவம் அவர்களின் நேர்காணலும் இச்சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Polskich hugo kasyno Graczy

Content Wówczas gdy funkcjonują bonusy z brakiem depozytowe – hugo kasyno Premia wyjąwszy depozytu 2024 – najlepsze rabaty kasynowe! Staram się znaleźć twojego Kasyna Premia