15034 ஜீவநதி: மூன்றாவது ஆண்டு வெள்ளி மலர்.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (நெல்லியடி: சதாபொன்ஸ், மாலு சந்தி, அல்வாய்).

137 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 200.00, அளவு: 25×18 சமீ., ISSN: 2012-7707.

இச்சிறப்பிதழில் பின் காலனியப் புலப்பாடுகளும் மட்டுப்பாடும் (சபா ஜெயராசா), தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கையும் தற்கால இலக்கியக் கொள்கை அடிப்படையில் அதன் பொருத்தப்பாடும்-சில அவதானிப்புகள் (செ.யோகராசா), கவிஞர் சி.வி.யின் இலக்கிய நோக்கு: காலமும் கருத்தும் (லெனின் மதிவானம்), ஜெயகாந்தன் -ஒரு நினைவூட்டல் குறிப்பு (திக்குவல்லை கமால்), தமிழில் அற இலக்கியங்கள் (பேருவளை றபீக் மொஹிடீன்), மகிழ்ச்சியோடு வாழச் சில சிறந்த வழிகள் (அருட்தந்தை இராசேந்திரம் ஸ்ரலின்), ஈழத்து ஆரம்பகால இஸ்லாமியத் தமிழ்க் கவிதைகள்-ஓர் ஆய்வு (சி.ரமேஷ்), தமிழின் செம்மொழித் தகுதியை நிலைநாட்டிய பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் (அருட்தந்தை தமிழ்நேசன்), கலை அழகியல் சமூகம் மார்க்சிய நோக்கின் அடிப்படைகள் (மு.அநாதரட்சகன்), யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தினர் மத்தியில் சடங்கியல், மருத்துவம், மானிடவியல் ஆய்வு (சண்முகராசா சிறீகாந்தன்), ஈழத்தமிழ் இலக்கியத்தில் என்.கே.இரகுநாதன் (எஸ்.சந்திரபோஸ்) ஆகிய இலக்கியக் கட்டுரைகளும், கே.ஆர்.டேவிட், புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், ஸ்ரீரஞ்சனி, எம்.எஸ்.அமானுல்லா, க.பரணீதரன், ப.ஆப்டீன், தெணியான், வதிரி இ.இராஜேஸ்கண்ணன், ச.முருகானந்தன், தாட்சாயணி, யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சீனா உதயகுமார் ஆகியோரின் சிறுகதைகளும், கே.எஸ்.சிவகுமாரனின் நேர்காணலும், கெகிறாவ ஸஹானா, வதிரி சி.ரவீந்திரன், சோ.பத்மநாதன், கண.மகேஸ்வரன், பெரிய ஐங்கரன், வெலிகம ரிம்ஸா முகம்மத், ஆரையூர்த் தாமரை, திருமாவளவன், கல்வயல் வே.குமாரசாமி, வெ.துஷ்யந்தன், ந.சத்தியபாலன், ஏ.இக்பால், த.ஜெயசீலன், தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா, தெ.இந்திரகுமார், கெகிராவ ஸூலைஹா, புலோலியூர் வேல்நந்தன், தம்பிலுவில் ஜெஹா ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் பார்க்க:

ஜீவநதி: அ.யேசுராசா சிறப்பிதழ்: 15959

ஜீவநதி: ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழ். 15846

ஏனைய பதிவுகள்

300, 20 Gratis Spins : Unique Gokhuis

Volume Unique Gokhuis Live Casino PlayMoola Gokhuis Unique gokhal Recht casino Unique Gokhal Avi ben gelijk goed afgeleid webste dit u buigbaar creëren voor toneelspelers

15375 பண்பாட்டு இழைப்பு : பனையோலை இழைப்புகளின் காட்சி.

கலை வட்டம்.  யாழ்ப்பாணம்: நுண்கலைத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (கொழும்பு 6: