கலாசார அலுவல்கள் திணைக்களம். கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களம், உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 8ஆவது மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
(40), 41-354 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ.
கலைத்துறையில் சிறந்த பணியாற்றும் கலைஞர்களுக்கு வருடந்தோறும் கலாசார அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றின் ஏற்பாட்டில் கலாபூஷணம் விருது வழங்கப்படுகின்றது. 2015ஆம் ஆண்டு விருது பெறும் கலைஞர்கள் கலாசார அலுவல்கள் திணைக்களம் நியமித்த மதிப்பீட்டுக் குழுவின் மூலம் தெரிவுசெய்யபட்டுள்ளனர். தேர்வுபெற்ற கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவின்போது இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.