15038 இன்றைய பத்திரிகைத் தமிழ்.

எழுத்தாளர்-பத்திரிகையாளரின் அகில உலக கத்தோலிக்க ஒன்றியம். யாழ்ப்பாணம்: எழுத்தாளர்-பத்திரிகையாளரின் அகில உலக கத்தோலிக்க ஒன்றியம், தபால் பெட்டி எண் 2, 1வது பதிப்பு, கார்த்திகை 1985. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

(2), 22 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12சமீ.

எழுத்தாளர்-பத்திரிகையாளரின் அகில உலக கத்தோலிக்க ஒன்றியத்தின் தமிழ்-இலங்கைக் கிளை 9.8.1985 இல் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. இலங்கைக் கத்தோலிக்க சமூகத் தொடர்பு சாதனங்களிற்கான தேசிய ஆணைக்குழுவின் தமிழ்ப் பிரிவின் வழிகாட்டலுடன் இயங்கிய இவ்வமைப்பில் தமிழ்க் கத்தோலிக்க எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உறுப்புரிமை பெற்றிருந்தனர். இவ்வமைப்பின் நோக்கங்களுள் ஒன்றாக ”தமிழ் எழுத்தாளர்-பத்திரிகையாளர்களைப் பயிற்றுவிப்பதும், அவர்களின் பணிகளை ஊக்குவிப்பதும், நெறிப்படுத்துவதும், ஒருநிலைப்படுத்துவதும்” ஒன்றாகவிருந்தது. பத்திரிகைத் தமிழ் பற்றிய அறிவினை வழங்கும் வகையில் இவ்வமைப்பின் அங்குரார்ப்பண தினத்தன்று ”இன்றைய பத்திரிகைத் தமிழ்” என்ற தலைப்பில் நிகழ்த்தப்பெற்ற கருத்தரங்க உரைகளின் சுருக்கம், கட்டுரைகளின் வடிவில் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கட்டுரைகள் முறையே கட்டுரை, ஆசிரியத் தலையங்கம், சிறுகதை, இலக்கியம், செய்திகள் ஆகிய ஐந்து தலைப்புகளில் வாசிக்கப்பட்டவையாகும்.

ஏனைய பதிவுகள்