அரசகரும மொழிகள் திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2016. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம், 118, பேஸ்லைன் வீதி).
xxiii, 276 பக்கம், விலை: ரூபா 655., அளவு: 15×21 சமீ.
இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கலைச்சொற்றொகுதித் தொடரில் இந்நூல் தொடர்பாடல், தகவல் தொடர்பூடகங்கள், ஊடகக் கற்றைநெறிகளில் கையாளப்படும் தொழில்நுட்பக் கலைச்சொற்களுக்கான மும்மொழி விளக்கத்தினை உள்ளடக்குகின்றது. தொகுப்புக் குழுவில் W.A.ஜயவிக்கிரம, சனோஜி பெரேரா, சூலனி மாத்துகொடகே ஆகியோரின் பெயர்களும், வெளியீட்டுக் குழுவில் I.M.K.P. இலங்கசிங்க, W.D.பத்மினி நாளிகா, W.A. நிர்மலா பியசீலி ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பதிப்பாசிரியர் குழுவில் டியுடர் வீரசிங்க, ஹரீந்திர பீ.தஸநாயக்க, சூலனி மாத்துகொடகே, ரீ.உமா காயத்திரி, எம்.ஜீவராணி ஆகியோர் பங்காற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65488).