15042 உங்களை எதிர்பார்த்திருக்கிறது சமூகம்.

சி.ரகுராம். யாழ்ப்பாணம்: கலாநிதி சி.ரகுராம், சாந்தி நிகேதன், கெருடாவில் கிழக்கு, தொண்டைமானாறு, 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: லீட்ஸ்மார்ட்(பிரைவேட்) லிமிட்டெட்).

(16), 329 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-95059-0-2.

”நமது ஈழநாடு” நாழிதளில் 01.10.2002 முதல் 10.07.2003 வரை வரைந்த ஆசிரியர் தலையங்கங்கள். இவை பலநோக்குப் பயன்பாட்டுத் தன்மை கொண்டவை. ஒருபுறம் இன்றைய வரலாறாகிவிட்ட அன்றைய அரசியல், சமூக, பொருளாதாரச் சூழலை அறியத்தருபவை இவை. மறுபுறம் ஊடகத்துறை மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் அமையத்தக்க பத்தி எழுத்துக்கள். தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், பிரச்சினைகள் என்பன அன்று போலவே இன்றும் இருந்துவருவதை இப்பத்தி எழுத்துக்களை 18 ஆண்டுகளின் பின்னர் வாசிக்கும் போது கூட உணரமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்