15043 காலத்தின் தடங்கள்.

நீ.மரிய சேவியர் அடிகள். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 2019. (யாழ்ப்பாணம்: ஜெ.எஸ். கிராபிக்ஸ்).

xii, 152 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-9262-38-1.

”கலை முகம்” இதழ்களில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கங்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. திருமறைக் கலாமன்றம் தனது செயற்பாடுகளை விரிவுபடுத்திய காலத்தில், 1990 இல் கலைமுகம் சஞ்சிகையை காலாண்டிதழாக வெளியிட ஆரம்பித்தது.  விடுதலைப் போராட்டத்தின் உச்ச காலம், இடப்பெயர்வுகள், எண்ணிலடங்கா அவலங்கள், சுனாமி என எல்லாவிதமான நெருக்கடிகள் நிறைந்த காலங்களிலும் பயணித்து 20019இல் கலைமுகம் முப்பதாவது அகவையில் நடைபோடுகின்றது. ஈழத்துச் சஞ்சிகை வரலாற்றில் முப்பது ஆண்டுகள் ஒரு கலை இலக்கியச் சஞ்சிகையின் இருப்பென்பது சாதனைக்குரிய பயணமாகும். முப்பது ஆண்டுகளின் நிறைவில் கலைமுகம் சஞ்சிகையில் இருந்து தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் முதலாவது நூலாக, கலைமுகத்தின் ஸ்தாபகரும், இயக்குநரும், பிரதம ஆசிரியருமான நீ.மரியசேவியர் அடிகளாரால் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்கள் தொகுக்கப்பட்டு ”காலத்தின் தடங்கள்” என்னும் பெயரில் வெளிவருகின்றது. கலைமுகம் முதலாவது இதழ் தொடக்கம் இறுதியாக வெளிவந்த 68 ஆவது இதழ் வரை வெளிவந்த ஆசிரியர் தலையங்கங்கள் அனைத்தும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆசிரியரின் எண்பதாவது அகவைப் பூர்த்தியின்போது இந்நூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்