பாக்கியநாதன் அகிலன். யாழ்ப்பாணம்: பேறு வெளியீடு, 71/2, கச்சேரி நல்லூர் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
x, 109 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 25.5×19.5 சமீ., ISBN: 978-955-5390-22-4.
2010இல் யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளை அகலித்தல் என்னும் ”அபிவிருத்திச் செயற்பாடு” மரபுரிமை இடங்கள், கட்டடங்கள், மற்றும் இயற்கை மரபுரிமைகள் ஆகியவற்றின் தொடர்ச்சியான இருப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியது. இந்த அச்சுறுத்தல் என்பது குறிப்பிட்ட பிராந்தியத்தின் வரலாற்றுத் தடயங்கள், பண்பாட்டுத் தனி அடையாளங்கள் என்பவற்றின் தொடர்ச்சியான இருப்பிற்கான அச்சுறுத்தலாகவும் அமைந்தது. இக்காலகட்டத்தில் வீதி அகலிப்பின் பாதிப்புகள், அதற்கு மாற்றீடாக செய்யப்படக்கூடிய மாற்று ஏற்பாடுகள் என்பன பற்றியும், உலகத்தில் இவ்விதமான நிலவரங்களைக் கையாளும் வேறுபட்ட பொறிமுறைகள், அபிவிருத்தி என்கின்ற எண்ணக்கருவின் ஆழமான பொருள் என்பன தொடர்பாகவும், ”உதயன்” நாளிதழில் ”நமது பெருமை மிகுந்த மரபுரிமைகள்” என்ற தலைப்பில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட பத்தி எழுத்துக்களினதும், இக்காலத்தை ஒட்டி இதே விடயம் தொடர்பாக பிற சஞ்சிகைகள் மற்றும் நூல்களில் எழுதப்பட்ட அல்லது எழுதப்பட்டு இதுவரை அச்சிடப்படாத கட்டுரைகளினதும் தொகுதியாக இந்நூல் அமைகின்றது. பா.அகிலனின் 40 பத்தி எழுத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.