15047 கலை இலக்கிய மெய்யியல் கொள்கைகள்.

வடிவேல் இன்பமோகன், சின்னத்தம்பி சந்திரசேகரம், இரத்தினசபாபதி பிரேம்குமார். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxiii, 213 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 700., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-668-7.

இந்நூலில் நான்காம் உலகக் கலைகள் (வடிவேல் இன்பமோகன்), ஆபிரிக்க ஒறேச்சர் (Orature): அறிமுகமும் அதன் அளிக்கை மரபுகளும் (சின்னத்தம்பி சந்திரசேகரம்), ஒழுக்கவியல் கொள்கைகளும் பிரயோக ஒழுக்கவியலும் (இரத்தினசபாபதி பிரேம்குமார்) ஆகிய மூன்று கட்டுரைகள் உள்ளன. இவை மூன்றும் இன்றியமையாத பொருண்மைகள் தொடர்பானவை. பழங்குடிகள் பற்றிய ஆய்வில் தவிர்க்க முடியாத கொள்கையாக நான்காம் உலகம் அமைந்துள்ளது. ஒறேச்சர் புதிய சமூகச் சூழலை வாய்மொழி மரபு எவ்வாறு தன்வயப்படுத்திக் கொள்கின்றது என்பதைப் புரிந்துகொள்ளத் துணை செய்கின்றது. ஒழுக்கக் கொள்கைகளை அறிந்துகொள்ளும் வகையில் மூன்றாவது கட்டுரை அமைந்துள்ளது. புதிய தளங்களில் காத்திரமான ஆய்வுகள் நிகழ்த்த இந்நூல் அடித்தளமிடுகின்றது. வடிவேல் இன்பமோகன் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், சின்னத்தம்பி சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவராகவும், இரத்தினசபாபதி பிரேம்குமார் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தத்துவவியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

ஏனைய பதிவுகள்

Gdy Naciąć Automaty Do Uciechy

Content Rozrywka Jednoręki Bandzior Mega Joker Rzeczywiste Automaty, Rzeczywiste Kapitał Bezpłatne Kasyno Bakarat Które to Hazard Pod Prawdziwe Finanse Trzeba Wyselekcjonować? Chcemy zaoferować uniwersalny pilot