15048 விற்கன்ஸ்ரைன்: மொழி அர்த்தம் மனம்.

செ.வே.காசிநாதன். சென்னை 600041: க்ரியா, புதிய இல. 2, பழைய இல. 25, 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், 1வது பதிப்பு, ஜீலை 2021. (சென்னை 600041: சுதர்சன் கிராப்பிக்ஸ்).

155 பக்கம், விலை: இந்திய ரூபா 375., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-93-82394-62-4.

பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் மேனாள் சிரேஷ்ட விரிவுரையாளரும் ஆதி கிரேக்க மெய்யியல் என்ற புகழ்பெற்ற நூலை மொழிபெயர்த்தவரும் சிந்தனையாளருமான கலாநிதி செ.வே.காசிநாதன் அவர்கள் எழுதிய ”விற்கன்ஸ்ரைன் – மொழி, அர்த்தம், மனம்” என்ற இந்நூல் விற்கன்ஸ்ரைன் தொடர்பாகத் தமிழில் வரும் முதலாவது நூலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1929 முதல் 1947 வரை மெய்யியல் பேராசிரியராக பணியாற்றி 1951இல் மறைந்தவர் லுட்விக் விற்கன்ஸ்ரைன் (1889-1951). இந்நூல் விரோச்சன தரிசனம்: ஒரு குறும்பு, முன்னுரை, அகமும் மொழியும், பிரத்தியேக மொழிவாதம், பிரத்தியேக மொழி குறித்து ஏ.ஜே.அயர், சொல்லும் பொருளும்: சுட்டல் முறை வரைவிலக்கணம், சொல்லும் அர்த்தமும்: பெயரும் பெயரை உடையதும், அர்த்தமும் பயன்பாடும்: வரைவிலக்கணமும் விளக்கமும், மொழி-அர்த்தம்-மனம்: பின்குறிப்புகள் ஆகிய அத்தியாயத் தலைப்புகளின்கீழ்; எழுதப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க:

பௌத்தம்: ஒரு மெய்யியல் பார்வை 15086

மேற்கத்திய நவீனவாதம் ஓர் அறிமுகம் 15372

ஏனைய பதிவுகள்

15849 என்.கே.ரகுநாதம்.

கற்சுறா (தொகுப்பாசிரியர்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2021. (சென்னை 600005: ஸ்ரீதுர்கா பிரிண்டர்ஸ்). 896 பக்கம், புகைப்படங்கள்,

14457 இயற்கை வளங்கள் தொடர்பான இரசாயனவியல்.

A.மகாதேவன். தெல்லிப்பழை: P.ஆறுமுகம், இரசாயனவியற் கழகம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (ஏழாலை: மகாத்மா அச்சகம்). (2), 52 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 10.00, அளவு: 21.5×14 சமீ. இயற்கை