15056 வெற்றித் திறவுகோல்.

கு.குணசிங்கம். யாழ்ப்பாணம்: கே.ஜி. இன்ஸ்ட்டிடியூட், 113, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (கொழும்பு 13: கே.வி. பிரின்டர்ஸ், 58, கிறீன் லேன்).

(6), 230 பக்கம், விலை: ரூபா 480., அளவு: 22×15 சமீ.

உயர் மதிப்பளிக்கப்பட்ட வாழ்வியல் பயிற்சியாளரும், ஊக்குவிப்புப் பயிற்சியாளருமான “கேஜி” மாஸ்டர் என அழைக்கப்படும் குமாரசாமி குணசிங்கம் அவர்கள், நிலையான பெறுபேறுகளை மக்கள் பெறுவதற்கு உதவிவரும் நீண்ட வரலாறு கண்டவர். ஒருமுக சிந்தனை, ஞாபகசக்தி, வாசிப்புத் திறன், பரீட்சைக்குத் தயார்படுத்தல் மற்றும் பரீட்சையை எதிர்கொள்ளும் முறை போன்ற பயிற்சிகளை வழங்குவதனூடாக அதிசிறந்த பெறுபேறுகளைப் பெறக்கூடிய வகையில் ஆயிரக்கணக்கான உயர்கல்வி மாணவர்களை பயிற்றுவித்தவர். மூன்று பகுதிகளைக் கொண்ட “வெற்றித்திறவுகோல்” என்ற இந்நூலின் முதலாவது பகுதியில் சுயமுன்னேற்ற வழிமுறைகளாக வெற்றிப்பயணம், சிந்தனை-சொல்-செயல், தடைகளைத் தகர்த்தல், சூழல் பற்றிய புரிதல், அனுபவம்-அறிவுப் பகிர்வு, நம்பிக்கை-நுட்பமான தகவல், தன்னம்பிக்கை-ஆச்சரியம் அதிசயம், முயற்சியும் உழைப்பும், இடையறாத் தொடர் உழைப்பு, கல்வியும் கற்றலின் நுட்பமும், மாணவ மனோபாவம் ஆகிய தலைப்புகளின்கீழ் அறிவுரை வழங்குகின்றார். இரண்டாவது பகுதியான “வாழ்வியல் வழிகாட்டல்கள்” என்ற பகுதியில் குடும்பமும் விழுமியங்களும், உறுதியான குடும்பம்-வாழ்தலின் ஆணிவேர், குழந்தைகள்-எதிர்காலத் தகவல்கள், தந்தையும் தாயும்-ஆளுமையும் பண்பும், முதுமையின் பயணம் ஆகிய தலைப்புகளிலும், ‘துரித முன்னேற்றத்திற்கான உத்திகள்” என்ற மூன்றாவது பகுதியில் நேரம் பற்றிய மதிநுட்பம், செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும், வார்த்தையும் வாழ்க்கையும் ஆகிய தலைப்புகளிலும் வாழ்வியல் வழிகாட்டுதல்களை மேற்கொண்டுள்ளார். 

ஏனைய பதிவுகள்

Wildcoins Gambling establishment

Content Borgata Casino No-deposit Free Revolves 2024 Hvordan Fungerer Gratis Spins? To have 25 incentive revolves, this may always end up being on the 0.20