சாம்பசிவமூர்த்தி சிவயோகன் (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiv, 359 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-716-5.
1994 முதல் உளமருத்துவத்துறையில் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருபவர் வைத்திய கலாநிதி சா.சிவயோகன். இவரது பணிக்காலத்தின் அனுபவங்கள், அவரது சிந்தனையில், எண்ணத்தில் உருவான பல கருத்துக்களை அவர் எழுத்து வடிவத்தினூடாகவும், உரைகளினூடாகவும், நேர்காணல்களினூடாகவும் வெளிக்கொணர்ந்துள்ளார். அவற்றில் தெரிந்தெடுக்கப்பட்ட தொகுப்பே இதுவாகும். சிந்தையுள் நிறைந்தவை, எண்ணத்துள் எழுந்தவை, உரைவழி பகிர்ந்தவை, செவ்வியில் விளைந்தவை என நான்கு பிரிவுகளிலும் நாற்பது படைப்புக்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார்.