15065 திருக்குறள் அமுதம்.

க.செல்வரத்னம். கொழும்பு 6: கந்தையா செல்வரத்னம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 54 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×16 சமீ.

லண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தின் “கலசம்” சஞ்சிகையின் வாயிலாக அறிமுகமானவர் கந்தையா செல்வரத்னம். திருக்குறள் அமுதம் நூல் சிறியது. ஆசிரியர் 1330 குறள்களுக்குள் சிலவற்றை தெரிவுசெய்து தமிழுக்கு ஓர் அழகிய அணிகலமாகத் தந்துள்ளார். அவருடைய வாழ்க்கை அனுபவத்தையும் பிறர்மீது அவருக்குள்ள அன்மையும் எடுத்துக்காட்டும் எழுத்துக்களாகவும் இது அமைகின்றது. அனுபவ உண்மைகள் விலை உயர்ந்தவை.  எழுத்தாளராகவும் ஆசிரியராகவும், குடும்பத் தலைவராகவும் மற்றும் பலகோணங்களில் தான் கண்டு உணர்ந்தவற்றின் சில உண்மைகளை எங்களுக்காக தெரிவுசெய்து நுணுக்கமாகப் படைத்துள்ளார்.

ஏனைய பதிவுகள்