15067 துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அருளிச் செய்த நன்னெறி (உரையுடன்).

சிவப்பிரகாச சுவாமிகள் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

viii, 42 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 75.00, அளவு: 21×15  சமீ., ISBN: 978-955-9233-87-9.

விநாயகப் பெருமானின் அடி தொழுது இயற்றப்பட்ட இந்நன்னெறியில் நாற்பது செய்யுட்கள் வெண்பா யாப்பில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு அறத்தின் விளக்கமாக உள்ளது. நன்னெறி என்பது பொருள் பற்றிய காரணப் பெயர்.  எந்நிலையிலும் பிறருக்கு இயன்ற உதவி செய்யவேண்டும் என்பதே இந்நூலின் சாரமாகும். நன்னெறிகளை விளக்க நூலாசிரியர் உவமைகளைக் கையாண்டுள்ள முறை மிகவும் போற்றத்தக்கதாகும். உடல் உறுப்புகளை உவமைப்படுத்தி, கதைகளை உவமைப்படுத்தி சிறந்த உவமைகளைக் கையாண்டுள்ள தன்மை குழந்தைகளுக்கு எளிதில் புரியச்செய்தல், சைவபுராணங்களைப் படிக்கத் துணை செய்தல் போன்ற உத்திகளோடு வினாக் கேட்பது, விடையளிப்பது போன்ற நுணுக்க முறைகளைக் கையாண்டு துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் படைத்துள்ள இந்நூல் நம் இளம்பராயத்திலேயே கற்றுணர வேண்டிய உன்னத நூல்களில் ஒன்று என்பதை உணர்ந்து, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை வெளியிட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Nya Free Spins

Content Zeus 3 spelautomat – Monthly Slots Tilläg Säkra Dina Gratisspinn Verifikationsprocessen är före din personlig förvissning så ingen annan ämna klara av bringa konton